பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

93



இத்திருப்பாடலில் “போவதோ சொலாய்” என்பது நினையத்தக்கது. அடைக்கலப் பொருளைப் பாதுகாக்காமல் வறிதே விட்டுச் செல்லல் பெரியோருக்குப் பொருத்தமல்ல என்று எடுத்துக் கூறிய அருமையை அறிக.

மையி லங்கு நற் கண்ணி பங்கனே
வந்தெனைப் பணி கொண்ட பின் மழக்
கையி லங்குபொற் கிண்ண மென்றலால்
அரியை யென்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்கு வெண் ணீற்று மேனியாய்
மெய்மை அன்பருள் மெய்மை மேவினார்
பொய்யி லங் கெனைப் புகுத விட்டு நீ
போவதோ சொலாய் பொருத்த மாவதோ?

(திருச்சதகம்-96)
புறம் புறம் திரிந்த செல்வம்!

தாய்!-உயிர்க்குலத்தில் தாய்க்கு நிகரான படைப்பு ஏது? இந்த உலகத்தில் தாய் கடவுள்! தாய், கடவுளை நினைப்பிப்பவள். தாய், கடவுளின் பிரதிநிதி. ஆம், குழந்தையின் உருவாக்கத்தில் தாயின் பங்கு மிகுதி. கடவுளின் கருத்தை முடித்துத் தருபவள் தாய். கருவில் மட்டுமன்று; மண்ணிற்கு வந்த பிறகும் குழந்தையின் வளர்ப்பில், காப்பில் தாயின் பங்கு அதிகம். குழந்தையின் நோய்க்குத் தாய் மருந்துண்கிறாள்! பத்தியம் பிடிக்கிறாள்! உறக்கத்திலும் தன் குழந்தையின் மீது விழும் பூங்கொத்தை ஒதுக்கித் தள்ளும் தாயை, பாரதிதாசன் படைத்துக் காட்டுகிறான். திருமுறைகள் “அம்மையே! அம்மையே!” என்று போற்றுகின்றன. “அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்” என்று திருக்களிற்றுப் படியார் பேசும். “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என்று ஐங்குறு நூறு வழுத்தும். மாணிக்கவாசகரின்