பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

105


கழிக்கவன்றோ அம்பலத்துள் உடையாருன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே” என்று இதனை மனோன்மணீயம் கூறி விளக்கும். இப்போது யார் சதுரர்? மாணிக்கவாசகர் பெற்றது அந்தமொன்றில்லா இன்பம்! ஆனால், திருப்பெருந்துறையுறை சிவன், தேனமுதத் தமிழில் திருவருள் நலங்கொழிக்கும் திருவாசகப் பாடல்களை, பண் சுமந்த பாடல்களைப் பரிசாகப் பெற்றனன்! கடையூழிக் காலத்தில் இறைவன் தன் தனிமைத் துன்பத்தை நீக்கிக் கொள்ளத் திருவாசகத்தைப் பெற்றுக் கொண்டனன்! மேலும் வழிவழி வரும் தலைமுறைகளை ஆண்டு கொண்டருளக் கருவியாக விளங்கும் திருவாசகத்தைப் பெற்றனன்! மீண்டும் மீண்டும் மண் சுமத்தல், பிரம்படி படுதல் முதலிய துன்பங்களிலிருந்து திருப்பெருந்துறையுறை சிவன் விடுதலை பெற்றனன். திருவாசகம் பெற்றதால் திருப்பெருந்துறையுறை சிவன் அடைந்தவை பலப்பல. அவையும் நிலையானவை! ஆதலால், சதுரர் திருப்பெருந்துறையுறை சிவனே!

ஆயினும் பலர் மாணிக்கவாசகரே சதுரர் என்பர். மாணிக்கவாசகர் ஆன்மா; அறியாமை உடைய ஆன்மா! இத்தகைய மாணிக்கவாசகர் பாசம் நீங்கப் பெற்று அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றதே பேறு. ஆதலால், மாணிக்கவாசகர் சதுரர் என்பர். ஆயினும் ஆன்மாக்களை ஆட்கொண்டருளுதல் இறைவனின் கடமை. இப்பிறப்பில் இல்லையாயினும் எப்பிறப்பிலாவது ஆட்கொண்டருளப் பெறுதல் வேண்டும். திருவருள் நலம் பெற்றவர்கள் எல்லாரும் மாணிக்கவாசகரைப் போலத் திருவாசகம் தந்தனரா? இறைவனையே எழுத வைத்தார்களா? இல்லை! இல்லை! ஆதலால் திருப்பெருந்துறையுறை சிவனே சதுரர்!

தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன்று என்பான்

கு.இ.VIII.8.