பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

115


பிணக்குக் கொள்ளாது அருள்பொழியும் பெருமானே! உன் நாமங்களையே பேசுவர்! இங்ஙனம் திருப்பெருந்துறைச் சிவபெருமான் திருநாமத்தையே பேசுபவர்களுக்கு எதிர் வரும் துன்பம் துடைக்கப்பெறும்.

நேற்றைய துன்பம் அறியாமையால் விளைந்தது! இன்று அதன் தொடர்ச்சி! ஏன்? எதிர்வரும் காலத்திலும் துன்பம்! அந்த எதிர்வரும் துன்பத்தையேனும் தடுத்தலாகாதா? தடுக்கலாம்! எப்படி? எப்போதும் பிணக்கிலாது வாழ்க! பிணக்கிலாத பெருந்துறையைச் சேருக! திருப்பெருந்துறையுறை பெருமானின் திருநாமங்களைப் பேசுக! எதிர்வரும் துன்பம் துடைக்கப்பெறும்! இணையில்லாத இன்பமும் வந்தடையும்! திருவருளின்பம் இச்சையினால் அடையக்கூடியதொன்றன்று! தவத்தால், சீலத்தால், நோன்பால் மட்டுமே எய்த முடியும்!

பிறவிக்கு-பிறவித் துன்பத்துக்கு வித்து ஆணவம்! ஆன்மாவை இயல்பாகவே பற்றியிருப்பது ஆணவம்! இந்த ஆணவம் என்றும் காயாமல் முளைக்கும் இயல்பினது! ஆணவத்தை அழித்தல் இயலாது. ஆணவத்தின் செயல் திறனை முடக்கலாம். ஆணவத்தின் ஆற்றலை அடக்கலாம். வினை செயல் உயிரின் இயல்பு. மனிதத்துக்கு வினையே உயிர்! வினைகள் என்றால் செயல்கள் என்று பொருள்! செய்யும் செயல்களே பயன் தந்து விடுவதில்லை; செயல் செய்வதன் நோக்கம் என்ன? உள்ளீடு என்ன? அதுவே கைகூடும்! கரும்பு பிடித்தவர் இறந்ததையும் இரும்பு பிடித்தவர் வாழ்ந்ததையும் எண்ணுக! ஆணவம் மேலும் மேலும் அடர்த்து ‘நான்’ ‘எனது’ என்னும் செருக்கினுள் சிக்கித் தலையால் நடந்து திரிந்து ஆகா வினைகள் மேலும் மேலும் செய்தல் வாழும் முறையன்று. ஆணவத்தின் ஆற்றல் மேலோங்கிப் பிறப்பிற்குரிய வித்து மேலும் விளையாமல் தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குரிய உத்தி, முதலில் பகைப் புலமாக இருக்கிற ஆணவத்தை அனுகூலமாக்கிக்