பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செடிசேர் உடலைச் சிதையாத(து)
எத்துக்கு எங்கள் சிவலோகா?
உடையாய் கூவிப் பணி கொள்ளாது
ஒறுத்தால் ஒன்றும் போதுமே!

(குழைத்தபத்து-2)
‘வா’ என்ற வான்கருணை

மாணிக்கவாசகர் அன்பு ஒன்றினையே வேண்டி நின்றார். “உனக்கு நிரந்தரமாய் அன்பு எனக் கருளாய்” என்று வேண்டினார். அன்பினால் ஊனும் உயிரும் உருகும் வகையில் அழுது அழுது அடி அடைந்தவர் மாணிக்கவாசகர். அதனால், அவர்தம் திருப்பாடல்கள் ஊனினை உருக்குகின்றன; உள்ளொளியைத் தருகின்றன. “பாம்பறியும் பாம்பின் கால்” - இது பழமொழி. கற்றாரை கற்றாரே காமுறுவர். அடியார்கள், அடியார்களுடன் இணங்கி அவர்தம் நடுவுள் இருப்பதையே விரும்புவர். அடியார் கூட்டத்தில் தம்மை அங்கீகரித்துப் பேசுவாரை விரும்புவர். மாணிக்கவாசகர் இந்த இயல்புகளுக்கு விதிவிலக்கானவரல்லர்.

மாணிக்கவாசகருக்குக் கண்ணப்பரிடம் பக்தி. கண்ணப்பர் தம் தூய அன்பை, அவர் இயற்றிய வழிபாட்டை, வழிபாட்டின் சிறப்பை வியந்து வியந்து உள்ளமெலாம் உவப்பப் பாராட்டுகின்றார்; பாராட்டி மகிழ்கின்றார்.

திருவுருவ வழிபாடு செய்தல் எளிதன்று. அது மிகவும் கடினமானது. திருவுருவத்தைக் கடவுளாகப் பாவிக்க வேண்டும். “திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன் தன்னைக் கண்டவர்க்குச் சிவனெனவே உறைவன் ஆங்கே!” என்பது சித்தியார். “திருக்கோயில் எழுந்தருளியிருப்பது திருவுருவமல்ல; கடவுளே” என்ற நம்பிக்கையுடன் வழிபட்டால் வழிபாடு இறைவனுக்குச் செய்தது ஆம்! அங்ஙனமின்றி