பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

165


திருவுருவம் என்று வழிபட்டால் வழிபாடு இறைவனுக்காகாது. இதனை மாணிக்கவாசகர்,

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே,
எங்களை ஆண்டு கொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில் திருவுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!

(திருப்பள்ளியெழுச்சி-7)

என்று பாடுவதறிக. “இது அவன் திருவுரு; இவன் அவன் என்று வழிபடுதலே முறையான திருவுருவ வழிபாடு. திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனைப் பூசை செய்ய வேதம் கற்றிருக்க வேண்டும்; ஆகமங்கள் தெரிந்திருக்கவேண்டும். பூசைக்குப் பல்வேறு பொருள்கள் வேண்டும். இங்ஙனம் பல்வேறு பொருளைச் சாதனமாகக் கொண்டும் மந்திரங்களை உச்சரித்தும் வழிபாடு செய்ய வேண்டும்.

சிவகோசரியார் மரபுவழி- விதிமுறைப்படி பொருள் பற்றிப் பூசை செய்தவர். நாள்தோறும் பொன்முகலியாற்றில் நீராடி விதிமுறைப்படி பூசை செய்தல் சிவகோசரியாரின் வழக்கம். திண்ணனாருக்கு - கண்ணப்பருக்குப் பூசனை, பழக்கத்தில் இல்லாத ஒன்று. கண்ணப்பர் வேடுவர் குலத்தைச் சார்ந்தவர். குல மரபுப்படி வேட்டையாடும் தொழிலைக் கற்றவர். அவர் இயற்பெயர் திண்ணனார். அவர், தோழன் வாயிலாக “மலை உச்சியில் குடுமித்தேவர். இருப்பார்; கும்பிடலாம்” என்று கூறக்கேட்டார். குடுமித் தேவரைக்காணும் ஆர்வம் திண்ணனாருக்குப் பொங்கிவழிந்தது. திண்ணனார் மலை ஏறுகிறார். உடற் சுமை