பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

207


நட்புச்செய்தோரிடமிருந்தும் அன்பு காட்டப் பெற்றவரிடமிருந்தும் பிரியமாட்டோம்! புறம் போக மாட்டோம்! நிச்சயமாகக் கடவுளிடத்திலிருந்து விலக மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.

புறமே போந்தோம் பொய்யும்
யானும் மெய்யன்பு
பெறவே வல்லேன் அல்லா
வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார்
மற்றொன் றறியாதார்
சிறவே செய்து வழி வந்து சிவனே
நின்தாள் சேர்ந்தாரே!

(திருச்சதகம்-86)
பிரிவிலாத இன்னருள்!


அறிவி லாத எனைப் புகுந்து ஆண்டுகொண்டு
அறிவதை அருளிமேல்
நெறியெ லாம் புல மாக்கிய எந்தையைப்
பந்தனை அறுப்பானைப்
பிறவி லாத இன் னருள்கள் பெற் றிருந்துமா
றாடுதி பிண நெஞ்சே!
கிறியே லாம் மிகக் கீழ்ப்படுத் தாய் கெடுத்
தாய் என்னைக் கெடுமாறே!

(திருத்தகம்-36)

“மாணிக்கவாசகர் அறிவால் சிவமேயானவர்” என்று கூறுவது மரபு. ஆயினும் மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகப் பாடல்களில் தம்மை “அறியாதவன்” என்றும் “அன்பில்லாதவன்” என்றும் திரும்பத் திரும்பக் கூறுகின்றார். நல்ல நன்செய்யில் மருதாம்புப் பயிரே பயிர்போல் இருக்கும். மாணிக்கவாசகரின் பழுத்த மனத்தில் பிறந்து வெளிவந்த திருவாசகப் பாடல்களின் சொற்கள் அன்பில் நனைந்தவை;