பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசக உவமைகள்

229


துறையில் பிச்சதியற்றி ஆட்கொண்டதாகவும், தான் அதன் அருமையை உணராததாகவும் மேற்கண்ட உவமையின் வாயிலாக விளக்குகின்றார். இக்கருத்தமைந்த அழகிய பாடல் இதோ:

மையி லங்குநற் கண்ணி பங்கனே
வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்
கையி லங்குபொற் கிண்ண மென்றலால்
அரியை என்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய்
மெய்மை யன்பருள் மெய்ம்மை மேவினார்
பொய்யி லங்கெனைப் புகுத விட்டு நீ
போவ தோசொலாய் பொருத்த மாவதே!”

தங்கத்தின் மதிப்பறியாக் குழந்தைபோல தன்னைக் கற்பனை செய்து கொள்ளுகின்றார் மாணிக்கவாசகர். தங்கக் கிண்ணம் போன்றது இறைவன் வழங்கிய தண்ணருள்.

அடுத்து, குழந்தை தங்கக் கிண்ணத்தின் மதிப்பறியாது கெடுத்தாலும் குழந்தையின்மீது யாரும் குற்றம் சொல்ல மாட்டார்கள். ஆதலால், குழந்தையின் கையில் கொடுக்கப் பெற்ற தங்கக் கிண்ணத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அத்தாய்க்கு இருக்கிறது. அதையுணர்ந்த தாய் குழந்தையைத் தொடர்ந்து சென்று அந்தப் பொற் கிண்ணத்தைக் காப்பாற்றுவது போல தன்னையும் காப்பாற்ற வேண்டும் என்று மாணிக்கவாசகர் விண்ணப்பிக்கின்றார். காரணம், இறைவன் வெண்ணீற்று மேனியன் அவ்வாறு வெண்ணீற்று மேனியனாக இருக்கின்றான் என்று குறிப்பதன் பொருள் ஆன்மாக்கள் வினை நீக்கம் பெறவேண்டும் என்பதற்காகவே அவன் வெண்ணீறணிகின்றான் என்றுணர்த்தலேயாகும். ஆதலால் குழந்தையின் அறியாமைக்குத் தாய் பொறுப்பேற்று ஈடுசெய்தல் போல தன்னுடைய அறியாமைக்கும் இறைவனே பொறுப்பேற்க வேண்டும் என்று