பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அழிக்க முற்படும்பொழுது அந்த உயிருக்குத் துணை நிற்பார் யாருமில்லை. அந்தக் கால கட்டத்தில் உயிர் தனித்தே நிற்க வேண்டியிருக்கிறது. இந்த அழகான தத்துவத்தை ஒரு சீரிய உவமையின் மூலம் மாணிக்கவாசகர் எடுத்துக்காட்டி விளக்குகின்றார்.

கொடிகள் படர கொம்புகள் தேவை! கொம்பில் ஏறிப் படரும் கொடியே வளமாக இருக்கும். பூக்கும், மணக்கும் அங்ஙனம் படர்தற்குக் கொம்பு கிடைக்காத கொடி தரையில் படரும். கொம்பில் படர்வதைப் போல தரையில் பண்ணப் பிணைந்து அடர்ந்து படராது. நரைத்து நலிந்து காட்சியளிக்கும். பூக்கவும் செய்யாது. மணக்கவும் செய்யாது. ஆதலால், கொடி வளர, மலர, மணம்வீச, காய்கனிகளாகிய பயனைத் தர கொம்பு தேவை. அங்ஙனம் கொம்பின்றி வாடிய முல்லைக் கொடியின் இயல்பறிந்துதானே பாரி முல்லைக்கொடி படரத் தேரை நிறுத்தினான்? பற்றிப் படரக்கொம்பு கிடைக்காத கொடி படராமல் கிடந்து அழியும். உயிர்க்கொடி - உயிருக்குப் பற்றுக்கோடாக இருக்கிற இறைவனுடைய திருவருள் கொம்பு இறைவனின் திருவருளைச் சார்பாகக் கொண்டு தழுவி வாழும் உயிர் சிவஞானம் மணக்கும். திருவருட்சார்பு கிடைக்காமல் ஏமாற்றமடையும் உயிர் அலமந்து அழியும். இதனை, ‘கொம்பரிலாக் கொடிபோல அலமந்து’ என்று குறிப்பிடுகின்றார். இதனை,

கொம்பரில் லாக்கொடி போல்அல
மந்தனன் கோமளமே
வெம்புகின் றேனை விடுதிகண்
டாய்விண்ணர் நண்ணுகில்லா
உம்பருள் ளாய்மன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
அம்பர மேநில னேயனல்
காலொடப் பானவனே.