பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்லுரை மறுத்தாலும் நினைவகற்றாதீர்! செயலிழக்காதீர்! சாலப் பரிந்து அன்பு செய்ம்மின்! அவர்களிடத்தில் அறிவொளியை ஏற்றித் தருக! அவர்கள் இன்புறு நலன்கள் பெற்றுவளர, வாழப் பணி செய்க! செய்த பணியைத் தொடர்ந்து பேணுக!

“இஃது ஒரு சிறந்த வாழும் நெறி.” (26)

இதனை அடிகள் பிறருக்காகச் சொல்லவில்லை. தாம் மேற்கொண்டு வாழ்ந்த நெறி இது என உலகவர்களுக்கு எடுத்துக்காட்டும் மெய்யியல் வாழ்நிலை விளக்கங்கள்.

“இன்று பத்திமை மேவியுள்ள அளவுக்கு மக்களுக்கு ஞானத்தில் ஆர்வம் இல்லை; வேட்கை இல்லை” (299)

“உழைப்பே உலகத்திற்கு உயிர்நாடி.
ஞான வாழ்க்கைக்கும் தளராத உழைப்புத்தான்
தேவை”. (373)

சமுதாய அறிவு வேறு; சமுதாயத் தத்துவம் வேறு. சமுதாய அறிவர்னது சமுதாயச் சிந்தனையாளர்களைத் தோற்றுவிக்கும். சமுதாயத் தத்துவமானது சமுதாயக் கண்ணோட்டத்தைத் தோற்றுவிக்கும். இருவகையினர்களும் சமுதாய அமைப்பைப் பற்றிச் சிந்திப்பவர்களே. சமுதாயச் சிந்தனையாளர்கள் உலகில் எக்காலத்திலும் தோன்றியிருக்கிறார்கள். சமுதாயக் கண்ணோட்டம் உடையவர்கள் தோன்றுதல் அருமை.

அடிகளார் போன்றவர்கள் சமுதாயக் கண்ணோட்டம் உடையவர்கள். சமுதாயச் சீரழிவை இரக்கக் கண்கொண்டு பார்த்து, அழுது அச்சீரழிவைப் போக்கத் தாம் பாடு படுவதோடு இறைவனையும் வேண்டித் தவமுஞற்றுவார்கள்.

அடிகளின் சமுதாயக் கண்ணோட்டத்துக்கு எவ்வளவோ சான்றுகள், ஆயினும் ஒன்றினை எடுத்துக்காட்டலாம்.

“சிலர் பரபரப்பாகவே திரிவார்கள்; அமைதியாக எதையும் பார்க்கும்-அனுபவிக்கும் ஆற்றலற்றவர்களாகப் பலர் இருப்பார்கள். தாமும் மாறுவார்கள்; பிறரையும் தம் வழி மாற்ற முயற்சிப்பார்கள். எல்லாவற்றையும் தாமே தாங்குவது போல எண்ணிக் கவலைப்படுவார்கள். அஃது “ஆன்மீக வளர்ச்சி இன்மையின் சின்னம்”