பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசக உவமைகள்

251


படையாகத் தெரியா வண்ணம் மறைந்தே இருக்கிறது. அதுபோல இறைவன் உயிர்களுக்குள் உறைதலை எளிதற் காணமுடியாதவாறு மும்மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. வலிய முயற்சிகளால் தோலையும் சக்கையையும் நீக்கிக் கடையும்பொழுது தோலும் சக்கையும் ஒதுங்கி எண்ணெய் வெளிப்படுகிறது அது போல, உயிர்களும் தவத்தால், நோன்பால்-அகம் நிறைந்த பக்தியால் முருக வாங்கிக் கடையும் பொழுது இறைவனும் வெளிப்படுகிறான்.

எண்ணெய் உடல் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருதல்போல், இறைவன் திருவருள் உயிர்வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. இங்ஙனம் இறைவனுடைய இருப்பையும், அவனை அடையும் முறையையும் அவனால் அடையத்தக்க பயனையும் ஒரே உவமையில் திருவாசகம் தெளிவாக உணர்த்துகிறது. பாடலைப் பாருங்கள்:

கொள்ளுங் கில்லெனையான் பரிற் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
நள்ளுங் கீழுலா மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போனின்ற எந்தையே!