பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத்தில் சமுதாய நோக்கு

255


துறவி, “பொன் வேண்டேன்; பொருள் வேண்டேன்; புகழ் வேண்டேன்; என்று பாடுகின்றார். அங்ஙனம் பாடியதால் மற்றவர்களுடைய வாழ்க்கையையும் அதே அளவுகோலைக் கொண்டு அவர் அளக்க விரும்பவில்லை. மற்றவர்கள் வறுமையின்றி வாழவேண்டுமென்று விரும்புகின்றார். வறுமையைக் கடக்காத மனிதர் வளமான ஞான வாழ்க்கைக்கு வருதல் இயலாது என்பது சமயத் தத்துவம் கூறும் உண்மை. ஆதலால் மாணிக்கவாசகர் ‘தொல்விடம்’ என்று வறுமையை வருணிக்கின்றார். இந்த நல்குரவாம் தொல்லிடத்திருந்து மானிட சமுதாயம் தப்பிப் பிழைத்துக் கரையேற வேண்டும் என்று திருவுளம் பற்றி அருளிச் செய்துள்ளார். மாணிக்கவாசகர் பிறந்த நாட்டில் நூற்றுக்கு அறுபது விழுக்காட்டு மக்கள் வறுமை விளிம்புக் கோட்டுக்குள் வாழ்கிறார்கள். அவர்கள் துய்த்து அறியாது காமுற்று அலையும் உணர்வுகள் பலப்பல. மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் இந்த நாடு நடைபயில வேண்டுமானால் வறுமை நீக்கத்திற்குரிய பணிகளைச் செய்து, அவர்கள் வறுமைத் துன்பத்திலிருந்து பிழைத்துப் பெருநெறி வந்த சேர உரிய பணிகளை மேற்கொள்ளப் பெற வேண்டும்.

மாணிக்கவாசகர் நாட்டில் நடமாடியவர்; நாட்டாரின் குறைநிறைகளை உணர்ந்தவர். நாட்டு மக்களிடையே அன்று முதல் இன்றுவரை நிகழும் ஒரு குறைபாட்டை மாணிக்கவாசகர் மிகுந்த வேதனையுடன் குறிப்பிடுகின்றார். ஊரில் உள்ளோர் அனைவரும் பேசுகிறார்கள். வாய் பெற்றோர் எல்லாரும் பேசுகிறார்கள். என்ன பேசுகிறார்கள்? “பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை” என்று மாணிக்கவாசகர் சொன்னபடியா பேசுகிறார்கள்? இல்லை அவர்களைப் பற்றியாவது-தமக்குத் தெரிந்தது தெரியாததைப் பற்றியாவது பேசுகிறார்களா? அதுவும் இல்லை. அவர்கள் மனத்தில் தோன்றுகின்றனவற்றை யெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சி சைத்தானாக இருந்தால் அவர்