பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 
5
ஞானப்பனுவல்

தமிழில் தோன்றியுள்ள திருவாசகம் போல் உயிர்த் துடிப்புள்ள ஒரு நூல் உலகில் வேறு எம்மொழியிலும் தோன்றியதில்லை. உயிர்த் துடிப்புக்கு வார்த்தை கொடுத்த ஒரு நூல் உண்டென்றால் அது திருவாசகம்தான். மனிதனின் உள் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அவனைத் திருவருள் இன்பத்திற்கு அழைத்துச் செல்லுகிறது அது. திருவருளிடத்து நம்மை அழைத்துச் செல்வதனாலேயே அதற்குத் திருவாசகம் என்று பெயர் ஏற்பட்டிருக்குமோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. கோயம்புத்தூருக்கு அழைத்துச் செல்லும் பாதையை நாம் கோயம்புத்தூர்ச் சாலை என்று குறிப்பிடுவது போல! உறுதிப்பாடு நிறைந்த உள்ளத்தில் எழுந்த ஒப்பற்ற ஞானப் பனுவல் திருவாசகம்.

தேன், வசதியும் வாய்ப்பும் உடையவர்கள் வீட்டில் உணவாகவும், சாதாரண மக்கள் வாழ்வில் மருந்தாகவும் பயன்படும் ஓர் அற்புதப் பொருள். அதிலும், ஒரு பூத்தேன் எத்துணை உயர்ந்தது! எவ்வளவு சிறந்தது என்பது நமக்கெல்லாம் நன்கு தெரியும். மாணிக்கவாசகர் ஒரு தேனீ போல, சிவபெருமானின் ‘திருவடி மலர்’ தவிர வேறு எம்மலரினும் உட்காராத-நுகராத-தேன் சேகரிக்காத ஓர்