பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7


வாழும் நெறி


வாழ்வாங்கு வாழ்தல் ஒரு கலை, அதிலும் இறைநெறி நின்று வாழ்தல் என்பது பெரும்பேறு. ஓர் ஆன்மா எப்படி வாழ்ந்தால் அந்த வாழ்வு பயனுடையதாக அமையும் என்று இறைவனே உணர்த்தியுள்ளார். தான் மட்டும் வாழ்தல், வாழ்க்கையே அல்ல. சிலர் இதனை விலங்கியல் வாழ்க்கை என்பர். இது தவறு. விலங்குகளும் தாவர இனங்களும் மற்ற உயிரினங்களுக்குப் பயன்படும் வாழ்க்கையை நடத்துகின்றன. ஆதலால், ஒன்றுக்கும் ஆகா வாழ்க்கையை விலங்கியல் வாழ்க்கை என்று கூறுவது தவறு. அப்படியானால் யாதொரு பயனுமிலாது வாழ்வோர் வாழ்க்கையை என்னென்பது? என்னவாக வேண்டுமானாலும் சொல்லட்டும். அதுபற்றி அலட்டிக் கொள்வதில் என்ன பயன்? இறைவன் மாணிக்கவாசகரை ஆண்டருளிய முறை நம்மனோர் வாழ்தலுக்குரிய நெறிமுறையாக அமைந்துள்ளது.

இறைவன்-திருப்பெருந்துறையுறை சிவன் மாணிக்கவாசகரை வாழ்விக்க எண்ணுகிறான். ஒரு தாய் காட்டும் பரிவைவிடத் தகுதி மிகுதியுமுடைய பரிவுடன் எண்ணுகின்றான். தாயின் பரிவே பரிவு. தாய் காட்டும் அன்பே இத்தரணியில் தலையாயது என்பர். ஆயினும் எல்லாத்