பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10


வாழாத நெஞ்சம்


வாழ்க்கைக்குக் குறிக்கோள் உண்டு. இந்த வாழ்க்கை ஏதோ குருட்டாம் போக்காக அமைந்த ஒன்றல்ல. திட்டமிட்ட ஓர் அமைப்பேயாகும். வாழ்வது மட்டும் போதுமா? முறைப்படி வாழவேண்டும். வாழ்க்கைக்கு ஒரு நெறியும் - முறையும் வேண்டும் என்று உணர்ந்த பெருமை தமிழினத்திற்கு உண்டு. அதனாலன்றோ தமிழில் எழுத்து சொல் இலக்கணத்தோடு பொருள் இலக்கணமும் எழுந்தது. திருக்குறளும் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்” என்று கூறுகின்றது.

வாழ்வாங்கு வாழ்வது என்றால் என்ன பொருள்? முறையாக உண்டு-உடுத்து வாழ்வதாகுமா? இல்லை. வாழ்க்கையின் குறிக்கோளை அடைகிற வழியில் பயனுட்ைய வாழ்க்கை வாழ்தலே வாழ்வாங்கு வாழ்தல். வாழ்க்கையைப் பொருளொடு கூட்டி-அறத்தோடு அணைத்து-இன்பத்தோடு இணைத்துப் பின்விலகி வீடுபெறும் வேட்கை வழி நின்று வாழ்வதே முறையான வாழ்க்கை “வீடு”, என்றால் விடுதலைபெற்று வாழும் இடம் என்று பொருள். எதிலிருந்து விடுதலை? துன்பத்திலிருந்து விடுதலை! துன்பத்திற்குக் காரணம் எது? பிறப்பு! பிறப்பினின்றும் அதனைத்