பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடையாத வாழ்க்கையே அது. “குறிக்கோள் இலாது கெட்டேன்,” என்று அப்பரடிகள் அலறுகின்றார். இதனையே,

“வாழ்கின்றாய் வாழாத
நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய்! ஆழாமற்
காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு! உனக்குச்
சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக்
கடலாய வெள்ளத்தே”

என்று திருவாசகப் பாடல் விளக்குகிறது. அதாவது வாழு! வாழ ஆசைப்படு, வாழ்வாங்கு வாழ முயற்சி செய். வாழ்க்கையின் பயனை அடையும் வழியில் வாழ்வாயாக. வாழ்க்கையின் பயனாக விளங்கும் திருவருளில்—மாறிலாத இன்பத்தை வாழ்த்தி வாழ்வாயாக. வாழ்த்தி வாழ்தலே வினை நீக்கும்—அவலம் நீக்கும் என்று திருவாசகம் வாழும் வழிகாட்டுகிறது; இல்லை, வாழும் வழியில் அழைத்துச் செல்கின்றது.