பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14


தகைசால் தலைமை


தலைமை, பொறுப்புடைய ஒன்று, தலைமைக்குரிய இயல்புகள் பலப்பல; தலைக்குத் தளராத நெஞ்சம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் வேண்டும். தம்மைப் பின்பற்றுவோரைக் காக்கும் ஆற்றல் வேண்டும். இன்று பலர் தலைமைப்பதவிக்கு ஆசைப்படுகின்றனர். ஆனால் அவர்களிடத்தில் தலைமைக்குரிய தகுதி கொஞ்சமும் இருப்பதில்லை. தலைமை நாடிப் பெறக்கூடியதல்ல. தகுதியுடையார் மாட்டு தலைமை வந்தடையும். தலைமைக்குரிய போட்டிகள் இன்று மட்டும் நடப்பதல்ல. உலகம் தோன்றிய நாள் தொடங்கி - தலைமைத் தத்துவம் மலரத் தொடங்கிய காலந்தொட்டு தலைமைப் போராட்டம் நடந்தே வந்திருக்கிறது. ஏன்! வரலாறுகள் முழுவதும் தலைமைப் போராட்டச் செய்திகள்தானே! புராணங்களிலும் கூட தலைமைப் போராட்ட வரலாறுகளையே காண்கிறோம்.

தக்கன் வேள்வி ஒன்று இயற்றினான். தக்கனுக்குச் சிவபெருமானிடம் உள்ள வருத்தத்தின் காரணமாக தான் இயற்றிய வேள்விக்குச் சிவபெருமானை அழைக்கவில்லை. திருமாலும் நான்முகனும்தான் வேள்விக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். சமய-மரபு வழி சிவபெருமானே