பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வரிப் பணங்களைக் கொண்டு மக்களின் வாழ்க்கைக்குரிய திருப்பணிகளைச் செய்ய வேண்டும். பாண்டிய மன்னனோ மக்களின் வரிப்பணம் கொண்டு பரிகள் வாங்கி வரச் சொன்னான். பரிகள் ஆடம்பரத்தின் சின்னம் அல்லது போர்ப்படை, பரிகள் வாங்கச் சொன்ன காலத்தில் பாண்டிய அரசனுக்குப் பகையேயில்லை. ஆதலால் ஆடம்பரத்துக்காகவே அரசன் பரிகளை வாங்கிவரச் சொன்னான் என்று கருத இடமிருக்கின்றது.

தேவையற்ற ஒன்றைச் செய்ய அமைச்சர் மாணிக்கவாசகரின் மனம் துணியவில்லை. ஆனால் அரசனின் ஆணை, அரசனைப் பரிவாங்கும் எண்ணத்திலிருந்து நல்வாழ்வுத் துறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். திருத்துதலில் பலமுறைகள் உண்டு. திருத்துபவர் திருத்தப்படுபவர் ஆகியோரைப் பொறுத்து முறைகள் மாறுபடும். தன்னினும் தாழ்ந்தாரை இடித்துக் கூறித் திருத்தலாம். தனக்குச் சமமானோரை அறவுரைகள் கூறித் திருத்தலாம். தன்னினும் உயர்ந்தோரை அவர் விரும்பியதை ஒழித்து வேறொன்றைச் சொல்வது அல்லது செய்தவன் மூலமே திருத்தலாம். இங்கு அரசன் திருத்தப்பட வேண்டும். ஆதலால் மாணிக்கவாசகர் அரசன் கூறியது விடுத்து, அதாவது பரிகளை வாங்காமல், திருக்கோயில் எடுப்பித்து, இதுவே செய்யத்தக்கது என்று அறிவுறுத்தினார். ஆதலால் அரசனுக்குப் பெருமை தரும் எண்ணத்தில் மாணிக்கவாசகர் செய்தாரே தவிர வேறு கருத்தில்லை. அங்ஙனம் பார்க்கும்பொழுது பரிகள் வாங்கக் கொடுத்த பணத்தைக் கொண்டு கோயில் கட்டியது நியாயமே ஆகும்.

“திருக்கோயில் கட்டியது எந்த வகையில் சிறந்தது. பரிகள் வாங்குவதைவிட?” என்று பகுத்தறிவு உலகம் கேட்கத்தான் செய்யும். திருக்கோயில் கட்டியதன் மூலம் நாடும் அரசனும் பெற்ற நன்மை ஒன்றல்ல; பலப்பலவாகும். சிறப்பாக அரசனுடைய பொருள் அறங்கலந்த அருளிய