பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஏசு மிடமீதோ? விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.

2

மாதங்களிற் சிறந்த மார்கழித் திங்கள்; வைகறைப் போது! வீட்டு வாயிலில் எழுப்பும் குரல் கேட்கிறது! குரல், எழுப்புவதாக மட்டுமில்லை. எள்ளி நகையாடுவதாகவும் இருக்கிறது! “அணிகலன்களையுடைய பெண்ணே! பேசும் பொழுதெல்லாம், “எந்தாய்! எந்தை இறைவனே!” என்று பேசுவாய்! நின் அன்பு முழுதும் அவனுக்கே உடைமை என்பாய்! ஆனால், இப்போது படுக்கைக்கே அன்பு வைத்தாயோ?” என்று காலம் கடந்து உறங்குபவளை எள்ளி நகைத்து எழுப்புகின்றனர். தூங்குபவள், துயிலின் பிடியில் சிக்கியிருந்ததால் நல்ல பணிக்கு எழுப்புபவர்களை நோக்கிச் “சீச்சி” என்கிறாள். “விளையாட இதுவா இடம்?” என்று கேட்கிறாள். வெளியே நின்று துயிலெழுப்பிய தோழிகள். “நாங்கள் ஏசவும் வரவில்லை; விளையாடவும் வரவில்லை. நாங்கள் அனைவரும் தேவர்களால் தொழுதற்கரிய-நமக்கு எளிதாக வந்தருளும் இறைவன்-திருச்சிற்றம்பலத்துத் தலைவன் திருவடிகளுக்கு அன்புடையோம். அந்த அன்பினை நீயும் பெறுதற்பொருட்டே எழுப்புகின்றனம்” என்கின்றனர்.

“பாசம்” என்பது மிக்க அன்பினைக்குரிப்பது. இப் பாடலில் இறைவனுடைய திருவடிகளின் அருமையும் எளிமையும் ஒரு சேர விளக்கப் பெற்றுள்ளன. விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம்” என்பது அருமையை உணர்த்துகிறது. விண்ணோர்கள் சூழ்ந்து சூழ்ந்து இறைவனை வாழ்த்த முயன்றாலும் பெருமான் அவ்வாழ்த்தினை ஏற்பதில்லை. ஏன்? அந்த வாழ்த்தில் பக்தியில்லை; நலம் இல்லை; வானவர்கள் வாழ்த்துதலில் அன்பில்லை; ஆசை நிறைய இருக்கிறது. அமரர்கள் ஆசைநோக்கி வாழ்த்து