பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறியாமை, அழிக்கும் இன்பங்களில் ஆழ்த்தும், அறிவு, இலக்குகளில் ஈடுபடுத்தும்; குறிக்கோளில் கொண்டு சேர்க்கும். அறியாமையில் ஆழ்வோர் அழிவிலின்பத்தை மறுத்தல் இயற்கை.

உறங்கும் தோழியிடம், “இன்னும் பொழுது புலர வில்லையோ?” என்று கேட்கின்றனர். உறங்குபவள் உறக்கத்தின் சுவையில் மேலும் சில வினாடிகள் உறங்க எண்ணி, அதே பொழுது தன்னுடைய உறக்க ஆர்வத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல்-சாக்காக, “எல்லோரும் வந்து விட்டனரா?” என்று கேட்கிறாள். இது, நேற்றும் இன்றும் உள்ள உலகியல் நடைமுறை. உறக்கத்திலிருப்போர் ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி உறக்கத்தை நீட்டிக்கவே விரும்புவர். இங்ஙனம் உறங்குபவள் கூற, எழுப்ப வந்தவர்கள் “நீயே வந்து எண்ணிக் கொள்” என்று மறுமொழி கூறுகின்றனர். ஏன்? உறங்குபவளின் உறக்கத்தை நீட்டிக்க விரும்பவில்லை; உடனடியாக உறக்கத்திற்கு முடிவுகட்ட விரும்புகின்றனர். அதுமட்டுமின்றி, உறங்குபவள் பேருறக்கத்தில் இல்லை. உறங்கியும் உறங்காமலும் இருக்கின்ற நிலையினளே! அவளுக்கு ஒரு பணியிருந்தால் உடன் எழுந்து வந்து விடுவாள். அவள் எழுச்சிக்குப் பணி தூண்டுதலாக அமையும்! ஆதலால், “நீயே வந்து எண்ணிக்கொள்!” என்கின்றனர். இங்ஙனம் கூறுகிறவர்களுக்கும் இதில் ஒரு தற்காப்பு இருக்கிறது. அதாவது, அரன் நாமத்தைக் கூறாமல் யார் யார் வந்ததனர்? என்று எண்ணிப் பொழுதைக் கழிக்க இவர்கள் விரும்பவில்லை. இங்ஙனம் எண்ணிப் பழகினால், யார் யார் வந்தார்? என்று எண்ணும் பழக்கமே மிகும். இறைவன் திருநாமத்தை எண்ணும் பழக்கம் முறுகி வளராது. ஆதலால் இவர்கள் எண்ண விரும்பவில்லை! எண்ணும் நிலையில் இவர்களும் இல்லை.

அமரர்களுக்கு அமுதவானை, வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானைக் காதலால் பாடிக் கசிந்து உருகி