பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

319


அருட்கடலாக விளங்குகின்றான். அவளைப் பாட எழுந்து வா! இந்த அழைப்பு நம் ஒவ்வொருவருக்குந்தான்! நாம் அனைவரும் பாடுவோம்! நமது வாழ்வில் இருள் இரிந்து ஓடட்டும்! பொழுது புலரட்டும்!

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோ மாங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே யெங்கணவ ராவா ரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே யெமக்கெங்கோ னல்குதியேல்
என்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய்.

9

கன்னியரனைவரும் உறக்கத்திலிருந்து எழுந்து கூடி விட்டனர். ஒருநிலை மனத்துடன் இறைவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். “பழமைக்கும் பழைமையானவனே! புதுமைக்கும் புதுமையானவனே! உன்னைத் தலைவனாகப் பெற்றோம். ஆதலால், நாங்கள் சிறந்த அடியார்கள் நாங்கள் அடியார்களையே வணங்குவோம். அடியார்களிடத்தேயே தோழமை கொள்வோம்! அவர்களையே மணப்போம்! அவர்கள் உவப்பனவே செய்து, உழுவலன்புவழி கிடப்போம். அவர்கள் பணியே, எங்கள் பணியெனச் செய்வோம். இங்ஙனமே அருளிச் செய்த நீ இவ்வகையே அருளிச் செய்யின் எக்குறையும் இல்லாது வாழ்வோம்.” என்று இறுமாந்து பாடிப்பரவிப் பாவை நோன்பு நோற்கின்றனர்.

உயிர்களில் ஆண், பெண் வேறுபாடு இல்லை. திருவெம்பாவைப் பாடல்கள் உயிர்களில் உய்திக்குரிய பாடல்களே! சிறப்பாகப் பெண்கள் ஓதுதலுக்குரியுன. தலைவனாகிய இறைவனை உயிர்கள் சார்தலே மணம், உடற்குரிய திருமணங்கள் நிகழ்ந்து, ஈருடலில் வாழ்ந்த உயிர்கள்