பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அழைத்ததை உணர்த்தும். ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்பன திருமுகங்கள். இவ்வைந்தும் முறையே ஈசானம் வடகிழக்கும், தத்புருடம் கிழக்கும், அகோரம் தெற்கும், வாமதேவம் வடக்கும், சத்தியோஜாதம் மேற்கும் ஆகிய திசைகளை நோக்கி இருந்தருள் செய்வன. இத் திருமுகங்களில் இறைவனை அருச்சித்து வழிபடுவோர் இன்புறுவர்.

ஞானம் விரும்புவோர் ஈசானத்திலும், செல்வம் விரும்புவோர் தத்புருடத்திலும், பாச நீக்கம் விரும்புவோர் அகோரத்திலும், சம்பத்து விரும்புவோர் வாம தேவத்தினும், முத்தி வேண்டுவோர் சத்தியோஜாதத்திலும் வழிபடுவர். பேறுகள் அனைத்தையும் ஒருசேரத் தருவது ஞானம். ஆதலால், ஈசானத்தில் வழிபட்டால் அனைத்தும் பெறலாம்; ஞானம் பெறலாம்; பொன்னும் போகமும் பெறலாம். ஆதலால், இறைவனை வாழ்முதலாகக் கருதி, உள்ளத்தில் எழுந்தருளச் செய்க! ஏத்தி வழிபடுக! இன்புற்று வாழ்க!

அருணனிந் திரன்றிசை யணுகின னிருள்போய்
அகன்றது வுதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரிய னெழவெழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாந்
திரணிரை மறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருணிதி தரவரு மானந்த மலையே
அலைகட லேபள்ளி யெழுந்தரு ளாயே.

2

இன்றைய திருப்பள்ளியெழுச்சித் திருப்பாடல், இறைவன், உயிர்களின் சாதல்-பிறத்தல் துன்பத்தை நீக்கியருளும் பாங்கினை வாழ்த்துகிறது.

“திருப்பெருத்துறையில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானே! திருவருட் செல்வத்தை அருள எழுந்தருளும் பேரின்ப மலையே! அலைகடலே! செங்கதிரோன் இந்திரன்