பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆங்கு விரிந்து முழுமையாகிப் பொறிகளில் இன்பத் தென்றலென வெளிப்படுவது! கண்ணகத்தே நின்று களிதரு தேனே! என்றதால் கண்களில் நின்றே களிப்பைப் பெறுதல் என்பது பொருள்! எல்லாவித இன்பத்திற்கும் அல்லது துன்பத்திற்கும் கண்களேதான் வாயில்! மற்றப் பொறிகள் தனித்தனியே தான் இயங்கும்! ஆனால், கண்கள் மற்றப் பொறிகளுக்கும் துணையாக இயங்க முடியும். கண்கள் வழியாக ஐம்புலக் களிப்பையும் ஒருசேரத் துய்க்க முடியும். “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள” என்ற சேக்கிழார் திருவாக்கும் அறிக. தொண்டு செய்யும் அடியார்கள் மண்ணகத்தே வாழ வந்தருள் செய்யும் பெருமான் பள்ளி யெழுந்தருள்கின்றான்! அவன் திருப்பள்ளியெழுச்சி எழுந்தருளும் திருவோலக்கத்தைக் கண்களால் காண்க! களித்து மகிழ்ந்து வாழ்ந்திடுக!

புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவு மலரல னாசைப்
படவுநின் னலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புருந்தெமை யாட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே.

10

மாதேவன் மண்ணிடைத் தோன்றி ஆட்கொள்ளும் திறனை வாழ்த்துகிற பாடல் இது.

“திருப்பெருந்துறை யுறைவாய்! ஆரமுதே! திருமாலும் நான்முகனும் பூமியிற் பிறவாமல் நாட்களை வீணாகக் கழிக்கின்றோமே என்று எண்ணிக் கவலைப்படுகின்றனர். பூமியில் பிறந்தால் சிவபெருமான் உய்யக் கொள்கின்ற நெறியில் உய்தி பெறலாமே என்று திருமால், மண்ணிற் பிறப்பை விரும்புகின்றான்; பிரமன் பிறந்திட ஆசைப்