பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இறைவன் மண் சுமந்து கூலி கொண்டு, கோலால் மொத்துண்டு அதன் பயனாகப் பண் சுமந்த பாடலைப் பரிசாகப் பெற்ற செய்தியை,

பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண் சுமந்த கூலி கொண் டக்கோலால் மொத்துண்டு
புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்!

(திருவம்மானை-8)

என்ற பாடலாலும் அறிந்துகொள்ள முடிகிறது.

முறையான செயலா?

மாணிக்கவாசகரின் வரலாற்றில் உய்த்து உணர்ந்து உரைக்கத்தக்க பகுதிகள் சில உண்டு. அரசன் குதிரைகள் வாங்க தந்த பணத்தைக் கொண்டு குதிரைகள் வாங்காமல் திருக்கோயில் கட்டியது-இன்னபிற அறங்கள் செய்தது சரியா? முறையான செயல்கள்தாமா? வெளிப்படப் பார்க்கின் தவறாகத்தான் தெரியும்.

உய்த்துணர்ந்து மெய்ப்பொருள் உணரின் உண்மைப் பொருள் விளங்கும். அரிமர்த்தன பாண்டியன் குதிரைகள் வாங்க விரும்பியதன் நோக்கம் என்ன? அண்டை அயல் அரசர்களுடன் போர் செய்து வெற்றிபெற்று பாண்டிய அரசையும் பேரரசாக்கத்தானே! இது,

“பொற்பி லங்கு புதுப் பரி இங்கு நம்
கொற்றம் ஓங்க விரைவிற் கொளப்படும்”

(ஞானோபதேசஞ் செய்த திருவிளையாடல்-15)

என்று பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணம் கூறுவதன் வாயிலாக அறியக் கிடக்கிறது. அரசுக்கு