பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

27


மக்கள் வரி கொடுப்பது மக்கள் நலன் கருதிய பணிகளுக்கேயன்றிப் போர் செய்து மக்களை அழித்து வல்லரசு அமைப்பதற்காக அன்று.

போரற்ற உலகமே வாழ்க்கைக்கு இசைந்தது. ஆதலால் அரிமர்த்தன பாண்டியன் குதிரை வாங்குவதை ஈசன் தன் திருவருள் விரும்பவில்லை என்பதை மாணிக்கவாசகர் மூலம் உணர்த்த விரும்பியதே இந்த வரலாறு.

தகுதி மிகுதியும் உடையான் ஒருவன் தம்முள் கருத்து வேறுபடின், ஏவியது நீக்கிப் பிறிதொன்று செய்யின் காரண காரியம் ஆராய்ந்து அதனை ஏற்பர்.

குதிரை வாங்கக் கொடுத்த பணத்தில் குதிரை வாங்காமல் சிறந்த அமைச்சராகிய மாணிக்கவாசகர் திருக்கோயில் திருப்பணி செய்ததை நன்றெனத் தேர்ந்து உய்த்துணர்ந்து இருத்தல் வேண்டும், அரிமர்த்த பாண்டியன், அல்லது கேட்டாவது தெரிந்து கொள்ள முயன்றிருக்க வேண்டும். பாண்டியனுக்கு அந்த நல்லூழ் இல்லை.

ஆனால் தமிழகத்திற்குத் திருவாசகம் பெறும் நல்லூழ் இருந்திருக்கிறது. அதனால் பாண்டியன் தெளிந்துணர மறுத்துவிட்டான். நல்லாட்சி என்ற நோக்கில் பார்த்தால் குதிரை வாங்காமல் திருக்கோயில் திருப்பணி செய்தது சரியே. அமைச்சரின் கடமையைத்தான் மாணிக்கவாசகர் செய்திருக்கிறார்.

குதிரைகள் போரின் சின்னம்; அவை அழிவு தரும். திருக்கோயில் ஆக்கம், கலைகளுக்கு ஆக்கம்; வேலை வாய்ப்பு வழங்குவது. மேலும் சமுதாய வளர்ச்சிக்கும் சமய வளர்ச்சிக்கும் உரியது. திருக்கோயில் மக்கட் சமுதாயத்திற்கு நிலையான சொத்து.

ஆதலால், பயனுடைய பணி செய்தது நன்றே. அப்படியானால் மாணிக்கவாசகர்-இறைவன் இருவருமே அரசனுக்கு அறிவுறுத்திக் குதிரைகளைப் பற்றிக்