பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22


பிழை தவிர்த்தாளும் பெருமான்!


பட்டினத்தார் அருளாளர்; வாழ்க்கையில் வெற்றி பெற பிழைகளைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்! ஆற்றுப்படுத்துகின்றார். சிறு பிழைகளையும் மலையாக நினைந்து வருந்துதல் வேண்டும். “நேற்றோடு வாழ்க்கை முடியாமல் இன்றைக்கும் வாழ அனுமதிக்கப் பெற்றிருப்பது பிழைகளைத் தவிர்த்துக் கொள்வதற்காகவேயாம். இறைவன் பிழைகளைப் பொறுப்பான். அதனால் தொடர்ந்து பிழைகள் செய்யலாமா? செய்யக் கூடாது.

பிழைகளினின்றும் விடுதலைபெற முயற்சி தேவை. பிழைகளை நினைந்து வருந்துதல், பிழைகளுக்குரிய காரணங்களை அறவே களைதல், பிழைகள் வாராது தடுக்கும் முயற்சியில் தலைப்படுதல் ஆகியன தேவை.

பட்டினத்தடிகள் பிழைகளைப் பட்டியல் போடுகிறார். மற்றவர் பிழைகளுக்குப் போட்ட பட்டியலன்று. அதை எளிதில் பலர் போடுவர். ஆனால் அவர் தம்பிழையென்று எண்ணி நினைந்து வருந்துகின்றார்; அழுகின்றார்.

பிழைகளுக்குக் காரணம் அறியாமை. அறியாமை என்பது தெரியாமையன்று; ஒன்றினைப் பிறிதொன்றாகத்