பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சூழ்நிலையில் திருப்பெருந்துறைச் சிவன் மாணிக்கவாசகர் வாழ்க்கையில் புகுகின்றான்.

அவ்வாறு புகும்போது, வினைகளின்பால் ஒன்றிக் கிடந்த மாணிக்கவாசகரால் இறைவனை வரவேற்கக்கூட இயலவில்லை; ‘புகுதல்’ என்பது வரவேற்பு இல்லாத இடத்தில் வலிந்து செல்லுதல் ஆகும்.

உலகியலில் தாழ்ந்தோர் உயர்ந்தோரிடம் அறிமுகப்படுத்திக் கொள்வர்.

அருளியலில் மூவர் தலைவனாய் விளங்கும் மூர்த்தி, மாணிக்கவாசகரிடம் தன்னை “வினைக்கேடன்” என்று அறிமுகம் செய்து கொள்கின்றான்.

அளவற்ற கருணை அது! ஆயினும் என்ன? வினையின் தாக்கம் பெரிதாக இருந்ததால் இறைவன் ஆட்கொண்டருளிய அருமைப்பாட்டினை அறிந்து உணர்ந்து மாணிக்கவாசகருக்கு அழத் தெரியவில்லை; பாடத் தெரியவில்லை; ஆவி சோர்ந்து நிற்கத் தெரியவில்லை. அதனால் “இரும்பின் பாவை’ என்று தன்னைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்.

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போது நான் வினைக்கேடன் என்பாய் போல
இளையன் நான் என்றுன்னை அறிவித் தென்னை
ஆட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவை
அனைய நான், பாடேன் நின் றாடேன் அந்தோ
அலறிடேன்; உலறிடேன்; ஆவி சோரேன்!
மூனைவனே, முறையொ நான் ஆன வாறு
முடிவறியேன் முதல் அந்தம் ஆயினானே!

(திருச்சதகம்–22)

என்று பாடுகிறார்.