பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
29


பெரியோர் செயல்!


உடலெடுத்த பிறவி உதவி செய்தற் பொருட்டே உயிர்க்கு நிறை நலத்தினைத் தந்து இன்ப அன்பினை வழங்கி வாழ்விப்பது உதவி செய்யும் பண்பாடேயாம். உயிர், எலும்பொடு தொடர்பு கொண்டு உடலாக உருமாறி உலகினில் உலா வருவது அன்பு செய்தற்கே யாம். திருவள்ளுவர்,

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

(73).

என்பார். உதவிக்குக் காரணம் அன்பு. உதவி செய்யும் பண்பில் மாறாது வளரும் விலங்கினங்கள், தாவர இனங்கள், களவு-காவலின்றி வாழ்கின்றன. அவற்றில் அனாதை இல்லை.

ஆனால், மனிதன் தனது இயற்கையான உதவி செய்யும் இயல்பினின்றும் மாறுபட்டு வாழ்வதால் அவனுடைய வாழ்க்கை முழுமையாகச் சிறைச்சாலையாக்கப் பெற்றுள்ளது. அந்தோ பரிதாபம்!

உதவியா? நாமா பிறர்க்குச் செய்வது? நமக்கு எங்கே வசதியிருக்கிறது? நமக்கு நாலுபேர் செய்ய வேண்டிய