பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளலார் நெறி I

427


திருக்கோயில் வழிபாடு போன்றவற்றில் வள்ளலாருக்கு நம்பிக்கை இருந்தும் கூடப் பெரும்பான்மையான சன்மார்க்க சங்கத்தினர் திருக்கோயில் வழிபாட்டை வலியுறுத்தாமல் - அது பற்றியே பேசாமல் தனியே ஒரு மடம் அமைத்து அங்கே ஒரு ஜோதியை வைத்து வழிபடுகின்றனர்-இராமலிங்க அடிகளை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். இந்நிலை இருப்பதனால், ஆண்டாண்டுக் காலமாக இந்த நாட்டின் பாரம்பரியத்தில் ஊறிக் கிடக்கும் திருக்கோயில் வழிபாடு காலப்போக்கில் அழிந்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் அருள்நெறித் திருக்கூட்டத்தினர் சன்மார்க்க சங்கத்தில் சேர வெட்கப்படுவார்கள் - கூச்சப்படுவார்கள். சன்மார்க்க சங்கத்தினர் திருக்கோயில் வழிபாடும், திருவுருவ வழிபாடும் தேவைதான்- தங்கட்கும் உடன்பாடுதான் என்கிற நிலைமையை உருவாக்கி அருள் நெறித் திருக்கூட்டத்தினரின் அச்சத்தைப் போக்கினால் இந்தச் சிக்கல் எளிதில் தீர்ந்து விடக்கூடும் என்று நம்புகிறேன்.

அருள் நெறித் திருக்கூட்டமும், சன்மார்க்க இயக்கமும் மாறுபட்ட கருத்துடைய இயக்கங்கள் அல்ல. உடன்பாடான இயக்கங்கள்தாம் துணை இயக்கங்கள்தாம் - வழி இயக்கங்கள்தாம். ஆதலின் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. சன்மார்க்க சங்கத்தினர் ஒரு பரு வடிவத்திலே நின்று விடுகிறார்கள். அருள்நெறித் திருக்கூட்டம், மேலும் ஒரு ஆயிரம் ஆண்டுக்காலப் பாரம்பரியத்திலே தன்னைப் பின்னிப் பிணைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் திருக்கோயில்களைப் பேணிக் காக்கவேண்டும்- திருக்கோயில்களுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்- திருக்கோயில்களுக்கு வருகிறவர்களின் வழிபாட்டுணர்ச்சியை வளர்க்கவேண்டும் என்ற உணர்விலே தான் அருள் நெறித் திருக்கூட்டம் இயங்கி வருகிறது.

இன்று பலர் நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு பல தீமைகளைச் செய்கிறார்கள். இந்தப் புத்திசாலித்தனம் நம் நாட்டிலேதான் உண்டு