பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டும். அவர்களிடமிருந்தே தத்துவப் பிரச்சார கர்த்தாக்களின் அன்றாட வாழ்க்கை நடைபெற வேண்டும். இதுவே பழைய முறை. இந்த அடிப்படையிலேயே ‘பிஷை’ என்ற வட சொல்லும், ‘பிச்சை’ என்ற தமிழ்ச் சொல்லும் பிறந்தன. சற்று நாகரிகம் தோன்றிய பிறகு, ‘மகேசுவர பூசை’ என்ற சொல் தோன்றிற்று. ஆனால், இன்று இவைகள் பிரச்சார கர்த்தாக்களால் நிறுவனமாகிப் பெற்ற உடைமைகள் மூலம் செய்யப்படுகின்றன. உயிர்க்குல மக்கள் மூலம் செய்யப் பெறுவதில்லை. ஆக, நிறுவனத் தோற்றத்திற்குப் பிறகு மனித குல ஒருமைப்பாடு, உய்தி பெறுதல் ஆகியவை ‘முயற்கொம்பு’ ஆகிவிட்டன. ஏன்? ஒரே தத்துவத்தைச் சார்ந்த நிறுவனங்களுக்கிடையே கூடப் ‘பெருமை’, ‘புகழ்’ப் போட்டிகள் கால் கொண்டுவிட்டன. இந்த நெறி முறை தவறிய நிகழ்வுகளின் விளைவாக மதச் சண்டைகள் மலியத் தொடங்கின. அனுபவப் பொருளாகிய கடவுளைத் தொழுவதற்குப் பதில் ‘யாருடைய கடவுள் பெரியவர்?’ என்பது போன்ற வெறுக்கத் தக்க விவகாரங்கள் பெருகின. இந்தக் கலகத்தில் கடவுளையே மறந்துவிட்டனர். வள்ளற் பெருமான் நினைந்து நெஞ்சுருகி இவைகளைப் “பிள்ளை விளையாட்டு” என்று உணர்ச்சி கொப்பளிக்க விமர்சனம் செய்கிறார். வள்ளற் பெருமான்.

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளை யாட்டே”

என்றும்,

“குலத்திலே சமயக் குழியிலே நரகக்
குழியிலே விழுந்து வீண் பொழுது
நிலத்திலே போக்கி.......”

என்றும்,

“சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி”

என்றும்,