பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்வதால் உலகம் இருக்கிறது; இயங்குகிறது என்று போற்றுகிறது!

“உண்டாலம்ம இவ்வுலகம்.......
தனக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென வாழுநர் உண்மையானே!”

என்பது புறநானூறு. இத்தகு நோன்பு நோற்பார், வள்ளுவம் கூறியாங்கு மருந்து மரம் என வாழும் பெருந்தகையாளர் அருகிப் போனமையால் இலர் பலர் ஆயினர்! அறியாமையிலும் ஏழ்மையிலும் கிடந்துழலும் மக்களுக்கு வாழ்தலில்கூட விருப்பம் இல்லை. கடனே என்று வாழ்வார்கள்! பிழைப்பு நடத்துகின்றவர்கள், வெந்ததைத் தின்கின்றனர்; விதி வந்தால் சாகின்றனர்.

இத்தகு மக்களுக்கும், தமது முன்னேற்றம் பற்றிய சிந்தனையே இருக்காது. வாழ்தலையே விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் முதலில் விருப்பம் உண்டாக்க வேண்டும்.

அதனால்தான் நமது சமயத்தில் திருவருட் சக்தி, ஆன்மாக்களுக்கு வேட்கையுண்டாக்க, கரும்பு வில் தாங்குகிறான். ‘காம கோட்டம்’, ‘காமாட்சி’ - என்ற வழக்குகள் தோன்றின.

ஆதலால், அறிஞர்கள் சாதாரண மக்களுக்காக அவர்களுடைய நலனுக்குரியவைகளைப் பற்றி எண்ணவேண்டும்; எண்ணிச் செய்யவேண்டும். அவர்களுடைய தேவைகளை அவர்கள் அடைவதற்குரிய வாயில்களைக் காட்டி வழி நடத்தி, அவற்றினை அடைதலுக்குரிய திறனைப் பெற்று வளரத் துணை செய்யவேண்டும்.

அவர்களுடைய வளர்ச்சிப் பாதையில் ஏற்படும் அகநிலைத் தடைகள், புறநிலைத் தடைகள் ஆகியவைகளைக்