பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8
தமிழ் – ஒரு நாகரிகம்

மூவேந்தர் ஆட்சி நலம்

தமிழகம் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் ஆட்சியிலமைந்து புகழ்பெற்ற பெருமையுடையது. தமிழகத் தில் ஆட்சி செய்த இந்த மூன்று பேரரசுகளும் செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் எண்ணற்ற தொண்டுகளைச் செய்தன. தமிழரசுகள் செய்த பணிகள் காலத்தால் அழியாத கற்கோயில்களாகவும் சொற்கோயில்களாகவும் விளங்குகின்றன. பழந்தமிழக அரசுகள் சமயச் சார்பற்றவையாக விளங்கின; மொழிந்லம் காத்துப் பேணின; ஆயினும், அவற்றுக்குப் பிறமொழிக் காழ்ப்பு இருந்ததில்லை. தமிழகத்தில் சாதி, குல அமைப்புகள் இருந்துள்ளன. ஆயினும் அவற்றினிடையே பிரிவினை இருந்ததில்லை; பகைமை இருந்ததில்லை. மக்கள் ஒருமைப்பாட்டு உணர்வுடன் கூடி உலகியலை நடத்தி வந்துள்ளனர். -

பாண்டிய நாட்டின் பெருமை

இந்த மூன்று பேரரசுகளுக்குள்ளும் பாண்டிய நாட்டு அரசு தனிச்சிறப்புடையது. பாண்டிய நாட்டு அரசர்கள்