பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மொழி, பழங்காலத்தில் தமிழ் என்றால் அது மொழியை மட்டும் குறிப்பதில்லை. அம்மொழியைச் சார்ந்து வளர்ந்த பண்புகளையும் நாகரிகத்தையும் குறிக்கும் சொல்லாகவும் தமிழ் விளங்குகிறது. "தமிழ் தழிஇய சாயல்" என்ற கல்லாடத் தையும், "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்” என்ற சுந்தரர் தேவாரத்தையும், "செழுந்தமிழ் வழக்கு" என்ற சேக்கிழார் வாக்கையும் எண்ணுக. பாண்டியப் பேரரசு கண்ட தமிழ்ச் சங்கங்களில் ஆலவாய் அண்ணல் அண்டமெல்லாம் கண்ட , நாயகன் தமிழாய்வுக்குத் தலைமைப் புலவனாய் அமர்ந்து தமிழாய்ந்ததை யாரறிவார்? சிவ பெருமான் மட்டுமல்ல, உமையம்மையும் முருகனும் சங்கத் தமிழ்ப் பலகையில் உடனிருந்து தமிழாய்வு செய்தனர். பாண்டியப் பேரரசில் பெருமான் விருப்புற்று எழுந் தருளினன். "பாண்டியநாடே பழம்பதியாக" என்று திருவாசகம் கூறும். பாண்டிய நாட்டை இடமாகக் கொண்டு இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் எண்ணற்றவை. இவற்றுள் 64 திருவிளையாடல்கள் சிறப்பானவை.

மாறவர்மன் அரிகேசரி

இத்தகு புகழ் பெற்ற பாண்டிய நாட்டு வேந்தனாக கி.பி. 640-இல் மாறவர்மன் அரிகேசரி என்பவன் அரியணை ஏறினான். இவனது ஆட்சி மிகுந்த உயர் நிலையை எய்தியிருந்தது. சேரர்களை வென்று வாகை சூடினான். சோழப் பேரரசிற்குரிய உறையூரை ஒரு பகற்பொழுதில் வெற்றி கொண்டான். சோழப் பேரரசோடு இவன் நிகழ்த்திய போரின் முடிவு நட்பாயிற்று உறவாக மலர்ந்தது. சோழ மன்னனின் மகள் மங்கையர்க்கரசியாரைத் திருமணம் செய்து கொண்டான். மாறவர்மன் அரிகேசரி தொடக்க காலத்தில் உயிரிரக்கக் கொள்கை அடிப்படையில் சமண சமயத்தால் ஈர்க்கப்பட்டுச் சமண சமயத்தைச் சார்ந்து