பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மாண்பு நிறைந்த மணமேற்குடி

மணமேற்குடி, வடவெல்லையாக வெள்ளாற்றையும், அம்மாப் பட்டினத்தைத் தெற்கெல்லையாகவும், வங்கக் கடலைக் கிழக்கு எல்லையாகவும், நென்மலி, வெள்ளுர் ஆகிய ஊர்களை மேற்கெல்லையாகவும் கொண்டு விளங்கும் ஓர் அழகிய சிற்றுார்; வளம் பொருந்திய ஊர். மருத நில அமைப்பும், முல்லைநில அமைப்பும் நெய்தலும் சார்ந்த சிறப்புடைய சிற்றுார், குருந்த மரங்கள் அடர்ந்து விளங்கும் அழகிய ஊர். இவ்வூரின் வரலாறு ஏழாம் நூற்றாண்டுக்கும் முந்திய பழமையுடையது. மணமேற்குடியில் வாழுநர் வழிவழி தமிழ் மரபுக்கேற்ற வள்ளன்மை மிக்கோராவர். இதனைச் சேக்கிழார்,

"மன்னுவண்மையினார் மணமேற்குடி” என்று பாராட்டுகின்றார். இத்தகு சிறப்புமிகு மணமேற்குடியில் குலச்சிறை நாயனார் தோன்றினார்; நாளும் நலமுற வளர்ந்து பாண்டிய நாட்டரசன் மாறவர்மன் அரிகேசரியின் முதன்மை அமைச்சுப் பொறுப்பேற்றார்.

கடமைக்களம்

அரிகேசரி மாறவர்மன் சமண சமயச் சார்பு, அரசி மங்கையர்க்கரசியால் ஏற்றுக்கொள்ள இயலாத நிலை. குலச்சிறை நாயனார் நிலையும் அதுவே. ஏன்? சமண மயத்தின் கொள்கை, கோட்பாடுகள் பல தமிழ் மரபுகளுக்கு இசைந்தன அல்ல. சமண சமயம் கடுந்துறவு நெறிச் சார் புடையது; பெண்மையை இழிவுப்டுத்துவது; மனையறத்தை வெறுப்பது; பண்ணும் பாட்டும் ஏற்காதது. இயற்கையோடி சைந்து வாழ்தல், சமணத்திற்கு ஏற்புடையதன்று. வழிவழித் தமிழ் மரபுகளுக்கு மாறாகத் தமது அரசன் சமண மயத்தைச் சார்ந்து ஒழுகுதல் முதலமைச்சர் குலச்சிறை நாயனாருக்கு நெஞ்சில் துயரத்தைத் தந்தது. அரசி