பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குலச்சிறையார் பெருமை

தண்டமிழ்ப் பாண்டிய நாட்டில் தமிழ் நெறிக்கு வந்த இடர்ப்பாடு குலச்சிறை நாயனாரின் அமைச்சுச் சிறப்பால் நீங்கியது. வெப்பு நோயால் பாதிக்கப் பெற்றுக் கூன் விழுந்த மாறவர்மன் அரிகேசரி, நின்றசீர் நெடுமாறன் ஆனான். இத்தகு சிறந்த பணியால் குலச்சிறை நாயனார் திருஞான சம்பந்த சுவாமிகளாலும் சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் பாடப்பெறும் புண்ணியப்பேற்றினை அடைந்தார்.

திருஞானசம்பந்தர் திருவாலவாய்க்குரிய சிறப்பாகக் "குலச்சிறை குலாவி நின்றேத்தும் பெருமையுடையது” என்று சிறப்பித்துப் பாடுகின்றார்.

"வெற்றவே யடியாரடிமிசை வீழும்
விருப்பினன் வெள்ளைநீ றணியும்
கொற்றவன் றனக்கு மந்தி ரியாய
குலச்சிறை குலாவிநின் றேத்தும்
ஒற்றைவெள் விடைய னும்பரார் தலைவ
னுலகினி வியற்கையை யொழித்திட்
டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற .
வாலவா யாவது மிதுவே"

மூன்றாம் திருமுறை திருவால-பா-2


சுந்தர மூர்த்தி நாயனார், "பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் பாடிப் பரவுகின்றனர். நம்பி என்ற சொல் தலைவன் என்ற பொருளுடையது. "பெரு நம்பி” என்று பெருமைக்குரிய தலைவன் என்ற பொருள் தோன்றப் பாடிய அருமை நினைந்து இன்புறத்தக்கது.

புன்மை நிறைந்த பொய் நீங்கவும் தென்னர் நாடு திருநீற்றொளியில் தோயவும் திருஞானசம்பந்தரின்