பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

113


ஆயினும், வட புலத்தில் அரசுகளே கண்டு வளர்ந்த சமயங்களாதலால் அவை தமிழகத்திற்குள் வரும்பொழுது தமிழகத்தில் நிலவிய பல்லவ, பாண்டியப் பேரரசுகளும் வரவேற்றன; ஆதரவளித்தன. ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. இத்தகைய போராட்டங்களைத்தான்் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் வாழ்க்கை வரலாற்றில் பார்க்கிறோம்.

சமணக் கொள்கைகள்

சமணத்திற்கு உயிர் உண்டு என்ற கொள்கையில் நம்பிக்கையுண்டு. அதே பொழுது உயிர்களே முற்றுணர்வும் முடிவிலாற்றலும் உடையன என்னும் நம்பிக்கையுடையது. சமணர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. அவர்களுடைய சமய மரபுப்படி கேவல ஞானம் எய்திய மனிதனே கடவுள் என்று வழிபடுகின்றனர். ஆனால் சமணர்களுக்கு வினைத் தொடர் பற்றிய நம்பிக்கையுண்டு. சமணர்கள் கொல்லா விரதத்தையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். சமண சமயத்திலிருந்த கொல்லாமை என்ற அறம் இந்திய நாட்டில் நிலவிய அனைத்துச் சமயங்களையும் தன்வயப்படுத்தியிருக்கிறது என்பது மகிழ்வான செய்தி.

பெளத்தக் கொள்கைகள்

பெளத்தம் பொதுவாக இந்து மதத்தோடு அதிகம் மாறுபடுவதில்லை என்ற ஒரு நம்பிக்கையுண்டு. ஆனால், பெளத்தம் கடவுள் நம்பிக்கையை ஏற்றுக் கொள்வதில்லை. அதே போல பெளத்தத்திற்கு உயிர் உண்டு என்பதில் நம்பிக்கையில்லை. இதில் இருவேறு கருத்துக்கள் உண்டு. இதனை ஆய்வது இங்கு நோக்கமில்லையாதலால் கைவிடப்படுகிறது. கடுமையான துறவை வற்புறுத்துவது பெளத்தம். இவ்விரு சமயங்களையும் மறுத்து இயல்பாக அமைந்த