பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"அவ்வினைக் கிவ்வினை என்றெடுத்து" ஐயர் அழுது செய்த வெவ்விடம் முன்தடுத்(து) எம்மிடர் நீக்கிய வெற்றியினால் எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே செய்வினை தீண்டா திருநீலகண்டம்” எனச் செப்பினார்

திருஞானசம்பந்தர் புராணம் பா 335,


என்று விளக்குகிறார். ஆதலால் அயல் வழக்குகளால் மக்களிடையே பரவிய ஊழ் வலிது என்ற கொள்கை மறுக்கப்பட்டு'ஊழையும் உப்பக்கம் காண்பது சாலும் என்ற செழுந்தமிழ் வழக்கு அரண் செய்யப் பெறுகிறது.

மானிடப் பிறப்பின் சிறப்பு


தமிழர் வாழ்வியல் இயற்கையோடியைந்தது. தழுவி வாழ்வது உலக இயக்கத்திற்கும் தமிழ் நெறிக்கும் முரணில்லை. வாழ்க்கையைப் பொய்ம்மையென்று தமிழ் நெறி கூறாது, இந்த வாழ்க்கையையே நிலையானது என்று கூறியும் மயக்கம் தராது.

தமிழ்மரபில் போற்றுதல் என்ற சொல்லுக்கே பயன் கொள்ளுதல் என்பதுதான் பொருள்.

"வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்"
"மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே"


என்று அப்பரடிகளும் -

"பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப்

போகமும் திருவும் புணர்ப்பானை"


என்று சுந்தரரும்

"வந்த பிறப்பை வணங்குவாம்!” என்று சேக்கிழாரும் பிறப்பைப் போற்றும் பாங்கு அறிக! பிறப்பு, பயனுடையது; இயற்கை தழுவியது. அப்பிறப்பை