பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமைந்திருப்பதை அறிந்து இன்புறுக. இக்கருத்தினை மிக அழகாக விளக்கும் அப்பரடிகள் திருப்பாடல் இது.

அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ
அன்புடைய மாமனும் மாமியும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஒருரும்நீ
துய்ப்பனவும். உய்ப்பனவும் தோற்றுவாய்நீ
துணையாயென் நெஞ்சம் துறப்பிப்பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்தும்நீ .
இறைவன்நீ ஏறுரர்ந்த செல்வன்நீயே!

(திருமுறை 6-95-1)

இது வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கும் அருமையான பாடல். அதுமட்டுமல்ல. மானுடத்தின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் பாடல்: ஒரு மானுட உயிர்க்குத் தந்தை முதல் துணை, தாய் இரண்டாம் துணை. தந்தை கருவுற்றே தாயிடம் கருமாற்றுப் பதியம் செய்யப் பெறுகிறது. மண்ணிற் பிறந்தவுடன் உடனிருந்து வளர்க்க உடன் பிறந்தான். பின் வளர்ந்த பருவ நிலையில் வாழ்க்கைக்குத் தாயாகவும், தோழியாகவும் அமைச்சனாகவும், காதல் மனைவியாகவும் விளங்குபவளை ஈன்று வளர்த்துத் தந்து உதவி செய்யும் அன்புடைய மாமனாகவும், மாமியாகவும், தன்னோடு ஒப்புமையுடைய வாழ்க்கைத்துணை நலமாகவும் மனையறம் நிகழ்த்துதற்குரிய பொருளாகவும் இறைவன் விளங்கியருள்கின்றான் என்று இத்திருப்பாடல் விளக்குகிறது. உலகின்பங்களைத் துய்த்து மகிழும்போதே இறைவன் துணையாய் அமைந்து உள்ளத்தின் வேட்கையை மெல்லத் தணித்தும் அதனைத் தூய துறவின்பால் ஆற்றுப் படுத்தும் பாங்கினையும் இப்பாடல் விளக்குகிறது. இதுவே செழுந் தமிழ் வழக்கு. அதனாலன்றோ இறைவன் சுந்தரர்க்குப் பொன்னும் பொருளும் தந்தனன்; ஒன்றுக்கிரண்டாகத்