பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

135


பாராட்டிய அறுபத்து மூன்று நாயன்மார்கள் வாழ்ந்த பகுதிகளில் நினைவுச்சின்னங்கள் அமைத்தல் வேண்டும். திருக்கோயில்களில் செழுந்தமிழ் வழக்குகிற்கு அரண் செய்த நால்வர் சந்நிதியை அழகுறப் பொலிவுற அமைத்திடல் வேண்டும். ஒவ்வொரு திருக்கோயிலிலும் திருவிழா நிகழும் பொழுது தவறாமல் திருமுறை விழா நடத்த ஆணை பிறப்பித்தல் வேண்டும். இவைகள் அறநிலையத் துறை அமைச்சர் அவர்களின் நினைவிற்கிடக்கும் செய்திகளேயாம். நமது வேண்டுதல் தூண்டுதல் தன்மையதேயாம்!

திருத்தொண்டு செய்வோமாக

நமது இனம் மொழிவழியிலோ, சமய வழியிலோ எந்தக் காலத்திலும் ஒருமைப் பாடுடையதாக இருந்ததில்லை; இன்றும் இல்லை. இந்த ஒருமைப்பாட்டை உருவாக்கவும் சேக்கிழார் முயன்றுள்ளார். சேக்கிழார் காப்பியத்தில் வரும் அடியர்களுக்குள்ளேயும் கூடச் சில இடங்களில் வேறுபாடுகள், பிணக்குகள் தோன்றுவதைப் பார்க்கிறோம். ஆனால் சேக்கிழார் அவற்றிற்கு எளிதில் தீர்வுகண்டது அதி அற்புதமானது. திருவிழா மிழலையில், திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்குமிடையில் ஒரு சிறு வேற்றுமை கால் கொள்கிறது. இந்த வேற்றுமையைச் சிவபெருமானே நல்லெண்ணத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கிறான். திரநாவுக்கரசருக்கு வாசியில்லாக் காசு. அதனால் திருநாவுக்கரசர் மடத்தில் காலத்தோடும், திருஞானசம்பந்தர் மடத்தில் காலந்தாழ்த்தும் அன்னம் பாலிக்கப் பெறுகிறது. நம்முடைய வாழ்க்கையில் இது என்ன சாதாரணமான பிரச்சனையா? அன்றும் அதே நிலைதான்! திருஞான சம்பந்தரின் உள்ளம் அலைமோதுகிறது. ஆனால், அஃது நம்மனோர் வாழ்க்கை போல அழுக்காறாக-அவாவாக வெளிப்படவில்லை. ஐயந்தொழிலாக வெளிப்படவில்லை; ஐயந்தெளிதலாக வெளிப்படுகிறது. காரணம் அறியும்