பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அளிக்கின்றது. சர் ஜான் மார்ஷல் (Sir join Morshal) என்ற GLtrog; "Saivism has a history going back to chalcolithic age or perhaps evenfurther still and it thus takes its place as the mostancient living faith in the world" என்று சைவத்தின் பழமையைப் பேசுகின்றார். சைவம் பழமையால் மட்டுமன்றிக் கொள்கையாலும் மிக உயர்ந்து விளங்குகிறது. சித்தாந்தம் என்ற சொல்லுக்கே முடிந்த முடிபு என்பதுதான் பொருள். ஏனைய சமயங்களின் கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டு அவற்றினும் மிக்கு விளங்குகின்ற பெருமையை உடையது சைவம். அதனாலன்றோ, "சைவத்தின் மேற் சமயம் வேறிலை" என்று பாராட்டிப் பேசப் பெற்றுள்ளது. "சித்தாந்தமே சித்தாந்தம்; அவைக்கு வேறானவை பூர்வபட்சங்கள்" என்பது இரத்தினத் திரயம். "அந்தம் வேதாந்தம்; அந்த தரம் சித்தாந்தம்; ஆகலின், அதனைப் பெற்றாரது பெருமை கூறுவார். சிவமென்னும் அந்தர என்றார்" என்பது சிவஞானபாடியம். நம்பிக்கைக்கும் நல்வாழ்க்கைக்கும் எடுத்துக்காட்டாக-இந்தியர் நினைவின் சீர்மைக்குச் சான்றாக-உயர்தர் வாழ்க்கைக்கு எல்லையாக, அணிபெற அமைந்த சமயம், சைவசித்தாந்தச் சமயமேயாம், என்பது உலகறிந்த முடிபு.

முப்பொருள் நிலை

சைவத் திருநெறி, உலகு, உயிர், கடவுள் என்ற முப்பொருள் உண்மையைத் தெளிவாக விளக்குகின்றது. இம் முப்பொருள் நிலையின் ஆய்வுணர்ச்சி, தொல்காப்பியத்திலேயே அமைந்திருக்கின்றது.

"மக்கள் தாமே ஆறறி வுயிரே"

"மாயோன் மேய காடுறை உலகமும்
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே”

என வரும் தொல்காப்பிய நூற்பாக்கள், முப்பொருள் தன்மையைத் தெளிவாக விளக்குகின்றன. உயிர் பாச சம்பந்தப்பட்ட உலகினைச் சார்ந்திருப்பதால் உய்ய