பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

தோற்றுவாய்

திருநாகேச்சுரம், சேக்கிழார் ஈடுபாட்டுடன் வணங்கிய திருத்தலம். சேக்கிழார் தமிழகத்தின் தவப் பயனாய்த் தோன்றியவர். தமிழக வரலாறும் நாகரிகமும் தலைமயங்கிக் கிடந்த பொழுது சேக்கிழார், காலத்தின் மாமருந்தெனத் தோன்றித் தமிழ் நாகரிகத்திற்கு அரண் அமைத்தார். சான்றோரை ஈன்று புறந்தந்து புகழ் பெற்ற தொண்டை நாட்டில் குன்றத்துரில் குணத்தில் மிக்காராகிய சேக்கிழார் தோன்றினார். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய பெரியோர் வரலாற்றை மாகாப்பியமாகச் செய்தருளினார். சுந்தரமூர்த்தி நாயனார் சில சொற்களில் திருத்தொண்டத் தொகை மூலம் அறிமுகப்படுத்திய அடியார்களின் வரலாற்றை, வரலாறாக விரித்து எழுதிய பெருமைக்குரியவர் சேக்கிழார். -

நூலின் சிறப்பு

பெரியபுராணம் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடப் பெற்றுள்ளது; நாள்தோறும் ஒதுதற்குரிய