பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

157


உடனிகழ்ந்து உள்ளிட்டழிப்பது. ஆதலால் விழிப்புத் தேவை. - இன்றும் நமது சமுதாயத்தைச் செழுந்தமிழ் வழக்கில் நிலைநிறுத்துவது நமது கடமை, அங்ங்னம் நிறுத்தினாலே பல தீமைகள் மறையும், பல தெய்வ வழிபாடு மறையும். அதாவது சிவத்தையே தொழுபவர்களாக வளர்வர். நாளையும் கோளையும் கண்டு அஞ்சார்; வழிபடார்; அன்பினால் இணைந்து வளர்வர். இந்தப் பணியைச் செய்தலே சேக்கிழாருக்குச் செய்யும் வழிபாடு.

வாழ்ந்தோர் வரலாறு

மானிட வாழ்க்கை அருமையானது, இனிமையானது. "வாய்ந்தது. நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்' என்டது - திருமுறை மொழி. இன்று வாழ்க்கையை மதித்திடுவோர் யார்? மாயாவாதம், பெளத்தம், சமணம் முதலிய கலப்பால் விளைந்த வாழ்க்கையைப் பற்றிய அச்சமே ஆட்கொண்டிருக் கிறது. வாழ்க்கையை வெறுத்துப் பேசுதல், மரணத்தை விரும்புதல், வாழ்க்கையை வளர்க்கும் சோதனைகளைத் தண்டனைகளாகக் கருதுதல், இந்த வாழ்க்கையைப் பாவச்சுமையெனக் கருதி அவலமடைதல் ஆகிய பொல்லாத -அறிவியலுக்கு ஒவ்வாத-சேக்கிழார் செந்நெறிக்கு மாறான மனப்போக்கே மேம்பட்டுக் காட்சியளிக்கிறது.

இது நமது மறை வழக்கன்று சேக்கிழார் செந்நெறியு மன்று.

வாழ்க்கை ஒர் அரிய கொடை அஃதை அறிந்து வாழ்தல் வேண்டும்; பிழைப்பு நடத்தக்கூடாது. வாழ்தல் வேறு பிழைத்தல் வேறு. இன்று பலர் பிழைத்தே பொழுது போக்குகின்றனர். வாழ்தலென்பது உயிர்ப்புள்ள கலை, நாள்தோறும் உயிர்ப்புடன் வளரும் மரங்கள் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும். அது போல வாழும் மனிதனும் உயிர்ப்புள்ளவனாக இருப்பான்- வளம் கொழித்து வாழ்வாங்கு வாழ்வான். இங்கு உயிர்ப்பு என்பது மூச்சு