பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விடுவதன்று செயலாக்கம். ஒருவர் வாழும் பொழுதும், அவர் மறைந்த பிறகும் அவருடைய இருப்பை அல்லது தேவையை மற்றவர்கள் உணரும் வகையில் வாழ்தலே வாழ்தல். புவியீர்ப்பு ஆற்றலைவிட வரலாற்றின் இழுவைப் போக்கு, குறிக்கோளும் உறுதியும் இல்லாதவரை வீழ்த்தியே வேடிக்கை பார்க்கிறது. ஒரு சிலரே-அதாவது வாழ்வோரே வரலாற்றின் இழுவையிலிருந்து தப்பி வெற்றி பெற்று நிற்கின்றனர்விளங்குகின்றனர். உலகிற் பெரும்பாலோர் காலத்தைக் கடத்துபவர்கள். காலத்தைக் கணக்கிட்டு-வாழ்க்கையின் அணிகளாக மாற்றும் பழக்கம் நம்மிடம் இல்லவே இல்லை. நம்முடைய மக்களின் காலம் சிந்திச் சிதறி வீணாகிப் பாழாய்ப் போவதை எண்ணிப் பார்க்க வேண்டும். நமக்குக் காலத்தின் அருமையை உணர்த்தச் சேக்கிழார் காலங்கடந்த பெருமானுக்குக் காலத்தைத் தந்து காப்பியம் செய்துள்ளார்; சேரமான் பெருமான், நாயனாரின் பூசையை ஏற்றுக் காலந்தாழ்த்தி எழுந்தருளியமைக்குப் பெருமான் விளக்கம் கூறவேண்டிய நிலை எற்பட்டமையை எண்ணிப்பாருங்கள்! காலக் குறிப்பை உணர்த்தவே மனக்கோயில் புகுந்த வரலாறு! ஆதலால் காலம் போற்றுமின் குறித்த காலத்தில் வழிபாடு ஆற்றுமின்! வாழ்க்கை வளம் கொழிக்கும்! காலத்தை வென்று விளங்குபவர்கள் வாழ்ந்தோராவார். அவர்கள் வாழ்ந்த காலத்தால் அவர்கள் பெருமை பெறுவதில்லை. அவர்களால் அவர்கள் வாழ்ந்த காலம் பெருமை பெறுகிறது. காலத்திற்குக் கருத்தினையும் புது மாற்றத்தினையும் தருபவர்களே, வாழ்பவர்கள். அவர்களால் அந்தக் காலம் பொலிவு பெறுகிறது. இங்ங்னம் புகழ்பட வாழ்ந்தார் வரலாறே பெரிய புராணம்.

அன்பு நெறி

புறத்தே நிகழும் பயணங்களுக்குச் சாலைகள் பாதைகள் இன்றியமையாதனை, சிாலைகள் செப்பமாக அமையாதபோது பயணம் எளிதாக அமைவதில்லை.