பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

161


உண்டு; இந்த அன்பு உயிரியலில் அற்பமானதல்ல; உயர்ந்தது. மிக மிக உயர்ந்தது என்று சேச்கிழார் பாராட்டுகின்றார். அதுவே அன்பு, மக்களிடத்தில் பெற்றோர் காட்டும் அன்பும் அன்பேதான்்! தோழர்களிடத்தில் காட்டும் அன்பும் அன்பேதான்்! சிவனடியாரிடத்தில் காட்டும் அன்பும் அன்பேதான்்! இறைவனிடத்தில் காட்டும் அன்பும் அனபேதான்்! இவற்றில் எந்த அன்பும் தாழ்ந்ததில்லை. ஒன்றில் ஒன்று உயர்ந்ததாக இருக்கலாம். ஒன்றில் ஒன்று உயர்ந்தது என்றால் ஒன்றில் தாழ்வு ஏது?

அன்பு என்பது உயிரின் உணர்வு; உயிரின் ஒழுக்கம். இந்த அன்பு எதன்மீது எவ்வகையில் காட்டப் பெற்றாலும் காட்டுகின்ற உயிரும் வளரும்; காட்டப்படுகின்ற உயிரும் வளரும். காட்டப்படும் இடம் நோக்கி நட்பு, காதல், பக்தி என்று அன்பு வேறு வேறு பெயரைப் பெறலாம். இம் மூன்றின் விளைவும் பயனும் ஒன்றேயாம். குறைவற்ற, நிறைவான அன்பு சிவத்தின் தன்மையைப் பெறுகிறது-சிவ மாகிறது. அந்த உணர்வில் திளைத்து நிற்கும்பொழுது நட்புக் கொண்டாலும், காதல் கொண்டாலும் அது சிவத்தின் பாற் காட்டிய பத்திமையைப் போலவே கருதப் பெறும். நட்பு காதலைக் கடந்து சிவத்தினிடம் அன்பு காட்டலாம். இஃது உலகியலில் ஒரோவழி நிகழும். அங்கேயும் சிவம் நட்புக் காட்டப்பெறும் பொருளாக, காதலிக்கப்பெறும் பொருளாக இடம் பெற்று அனுபவத்தை வழங்குகிறது. மாணிக்கவாசகர் சிவத்தையே காதலித்தார். அந்த அனுபவம் திருக்கோவை யாராக மலர்ந்தது. சுந்தரர் பரவையாரைக் காதலித்தார். இவ்விருவரின் காதலில் மாணிக்கவாசகர் காதல் உயர்ந்தது. ஆனாலும், சுந்தரர் காதல் தாழ்ந்ததன்று. அது சிவத்தினைக் காதலிப்பதற்கு முரணன்று. பரவையார் காதல் வழியிலேயே சிவத்தைக் காதலிக்க முடியும் என்னும் குறிப்பில் சேக்கிழார் பாராட்டுகிறார். அறியா மக்கள் உலகியல் காதலுக்கும் பக்திக்கும் இடையில் பெரிய இடைவெளியை உண்டாக்கிக்