பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

177


குறிக்கோள் நிறைந்த வாழ்க்கை என்பது இடர்களைப் பற்றிக் கவலைப்படாதது. ஆங்குப் பாசமும் இல்லை; பழிக்கஞ்சுதலும் இல்லை; குறிக்கோளை நிறைவேற்றுதலே இலக்கு குறிக்கோள் நெறியில் பயணம் செய்து இனிதே முடித்த பெரியாரின் வரலாறே பெரிய புராணம். வாழ்க்கைக்கு, உயர்ந்த குறிக்கோளாக எடுத்துக் கொள்வது நல்லது; இயலாதுபோனாலும் கவலைப்பட வேண்டிய தில்லை. உலகியல் வாழ்க்கையில் இன்பம் தரும் நட்பு, காதல் போன்ற துறைகளிலாவது குறிக்கோளுடைய வாழ்க்கை நடத்தக் கூடாதா? இன்பத்திலும் துன்பத்திலும் இழப்பிலும் ஈட்டத்திலும் குறைகளிலும் நிறைகளிலும் தோய்ந்து நின்றுவிடாமல் காதலையும் நட்பையும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்தல் சேக்கிழார் காட்டும் தனிநிலையில் சிறப்புற்ற வாழ்க்கை, சமுதாய நிலையில் சிறப்பையும் இன்ப அன்பையும் தரும் வாழ்க்கை இன்று இந்த நாட்டை வருத்தும் கொடிய நோய் குறிக்கோளிலாமைதான்். தனி மனிதன், குடும்பம், சமுதாயம், அரசியல் ஆகிய அனைத்துத் துறைகளிலுமே குறிக்கோளுடைய வாழ்க்கையைக் காணோம். ஆசைகளும் அவலங்களும் அலை மோதுகின்றன. அழுக்காறும் அவ்வழிப்பட்ட பகையும் சமுதாயத்தை உருக்குலைத்து அலைக்கழிக்கின்றன. இன்றைய காலக் கட்டத்தில் திருநீலகண்டநாயனார் மனைவியை ஒத்த தலைவியும், சிவபெருமானையொத்த நட்பும், மனுநீதிச் சோழனையொத்த அரசும், ஏனாதிநாத நாயனாரை ஒத்த பகைவர்க்கருளும் பண்பும் நாட்டில் கால் கொள்ளுமாயில் இந்தச் சமுதாயம் மேம்படும்.

சாதி வேற்றுமைகளற்ற சமுதாயம்

மனித குலத்தின் பிரிவினை தீது. பிரிவினை வேறு; வேறுபாடு வேறு. இயற்கை நியதியின் வழியிலும் சமுதாய அமைப்புக்களின் காரணமாகவும் வளர்ச்சி நிலைகளின்

கு.IX.12