பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

187


சேக்கிழாருக்கும் மகளிரைப் பெருமைப்படுத்தும் செந்தமிழ் நெறியே ஏற்றதாக இருந்தது. வாழ்க்கையில் ஒரு பகுதியாகிய இல்லத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற பெண், குடும்பத்தில் விருந்தோம்பல், வழங்குதல் முதலிய அனைத்துரிமைகளையும் பெற்றிருந்தாள். இதனைக் காரைக் காலம்மையார் புராணத்தில் வரும்,

"நம்பரடி யார்அணைந்தால் நல்லதிரு அமுதளித்தும்
செம்பொன்னும் நவமணியும் செழுந்துகிலும் முதலான
தம்பரீவி னால்அவர்க்குத் தகுதியின்வேண் டுவகொடுத்தும்
உம்பர்பிரான் திருவடிக்கீழ் உணர்வுமிக ஒழுகுநாள்"


என்ற திருப்பாடலால் அறியலாம்.

காரைக்காலம்மையார் பரமதத்தனுக்குப் பாங்காக அமைந்த மனைவி. தம் கணவன் மாங்கனியைச் சுவைத் துண்ணும் திறமறிந்து இல்லை என்று கூற மனம் வராது மாங்கனி தேட முயன்றமை அவர் கற்பிற்கு எடுத்துக் காட்டு. எண்ணரிய மாங்கனியை இறைவனிடத்தே பெற்றது அம்மையாரின் நிறைநலத்துக்குச் சான்று. கணவன் மனம் மாறியவுடன் தனது பொற்புடை அழகை, கணவனுக்குப் பயன்படாமையின் காரணமாகத் துறந்தமை அம்மையாரின் கற்புத் தவத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. அந்நிலையை அவலமாக மாற்றாமல் அருளாக மாற்றித் தவமே தவம் செய்தது போல அம்மையார் பேயுடம்புடன் செய்த தவமும், கயிலையாத்திரையும், "பெண்ணிற் பெருந்தக்க யாவுள?” என்ற வள்ளுவத்தின் வினாவுக்கு, "ஆம், பெண்ணோடொத்த பெருமை பெண்ணேதான்்" என்று விடையளிப்பதாக விளங்குகின்றது. அதனாலன்றோ நமையாளும் சிவமே "அம்மையே” என்று அழைக்கும் பேற்றினைப் பெற்றார்.

தமிழக வரலாற்றின் பெருமையை-சைவ நன்னெறியின் சீர்மையை இன்றளவும் நாம் அடைந்து, கடைப்பிடித்து ஒழுகத் தக்கவாறு விளங்கியருளிய பெருமை மகளிர்க்கே