பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இல்லத்திற்கு எடுத்தேகுக' என்று அறிவித்து அள்ளிக் கொள்ளச் செய்த ஒல்காப் புகழ்மிக்க ஒப்புரவுப் பண்பாட்டை என்னவென்று வாழ்த்துவது! இளையான்குடி மாற நாயனாரின் விருந்தோம்பற் பண்பும் நெஞ்சில் நெகிழ்வு தரத்தக்கது. சேக்கிழாரின் பெரிய புராணத்திலுள்ள ஒப்புரவு நெறி இன்றைச் சமுதாயத்தில் மேற்கொள்ளப்பெறுமானால் நிர்ப்பந்தமான-வன்முறை வழிப்பட்ட சமுதாய மாற்றத்தை அவாவ வேண்டிய அவசியமில்லை.

தமிழ் நாகரிகம் சமநிலைச் சமவாய்ப்புச் சமுதாயத்தைக் குறிக்கோளாக, உடையது. அந்நெறியிலேயே முயன்று வாழ்ந்த பெருமை தமிழினத்திற்கு உண்டு. சங்ககாலத்துச் சான்றோர் பக்குடுக்கை நன்கணியார் என்பவர், 'ஒரு வீட்டில் மணமுரசு கேட்பானேன்? பிறிதொரு வீட்டில் சாப்பாறை கேட்பானேன்? இம்மாறுபட்ட நிகழ்வு கொடுமையானது. இதற்குக் காரணமாய் அமைந்துள்ள அடிப்படை பண்பில்லாதது. உலகத்தின் நடைமுறை இன்னாததாக இருக்கலாம்; ஆனால் நாம் முயன்று அதை இனியதாக ஆக்க வேண்டும்' என்று அறிவுறுத்துகின்றார்.

"ஒரில் நெய்தல் கறங்க ஒரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பனிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
இன்னா தம்மஇவ் வுலகம்
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே."

(புறம்.194)


இங்குப் பேசப்பெறும் துன்பம் இயற்கையின் வழிப்பட்டது. அதாவது இறத்தலைப் பற்றியது. இறத்தல் இயற்கை இயற்கை நியதியின் வழிப்பட்ட துன்பத்தைச் சாடுகிறார். அதையே மாற்றச் சொல்கிறார். ஆனால்