பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குருபூசை எப்படிக் கொண்டாடவேண்டும்:

“பெரியபுராணச் சொற்பொழிவுகள்” என்னும் இந்நூல், தவத்திரு அடிகளாரின் பெரியபுராணம் பற்றிய பதின்மூன்று அருளுரைகளில் தொகுப் பேயாகும். ஆதலின் இதில் பொதுவாக சைவத்தின் பொதுத் தன்மையும், நாயன்மார் களின் வாழ்வினால் மக்கட்கு உணர்த்தப்படும் பொது அறங்களுமே பேசப்பட்டுள்ளன. மேலும் "சைவசித்தாந்தம்” கூறும் இறை. உயிர், தளை என்னும் முப்பொருள் உண்மையை உணர்த்தும் உன்னத சமயம் என்பதைப் பல இடங்களில் வற்புறுத்தியுள்ளது. பூரணம் - நிறைவு. நிறைவுடைய பொருளிலிருந்து குறைவுடைய பொருள் தோன்றாது. குறைவுடைய பொருளிலிருந்து நிறைவு தோன்றலாம் என்று கூறி பூரணமான கடவுளிலிருந்து அறிவில்லாத உலகமோ, அறிவித்தால் அறியும் உயிர்களோ தோன்ற இயலாது என்ற அறிவியல் சார்ந்த உண்மையை அறிவித்துள்ளது மகிழ்ச்சிக் குரியதாகும்.

மேலும், நாயன்மார்களின் வாழ்வியலை நாம் எப்படி யெல்லாம் பயன்படுத்தி வளம் உறலாம் என்பதைப் பட்டியல் இட்டுக் காட்டியுள்ளமை பயன்தரும் செயலாகவே விளங்குகிறது. திருநாவுக்கரசர் குருபூசையை, உழவாரப்பணி செய்து கொண்டாடுக. கண்ணப்பர் குருபூசையை, பார்வைக் குறையுடையோருக்குக் கண்ணாடிகள் வழங்கிக் கொண்டாடுக. திருநீலகண்ட நாயனார் குருபூசையை ஏழை எளியவர்கட்கு உண்கலம் கொடுத்து, உணவும் அளித்துக் கொண்டாடுக. இயற்பகை நாயனார் குருபூசையை ஏழை எளியவர்கட்குத் திருமணம் செய்து வாழ்த்திடுக. தண்டியடிகள் நாயனாரின் குருபூசையை திருக்குளம் துர்வாருதல் செய்து எல்லோருக்கும் தூநீர் கிடைக்கத் துTய பணி செய்க, என்று அவரவர் தொண்டுகளை ஒட்டிய பணிகளைச் செய்துயர்க என இனிய எளிய அறம்