பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

215


வைக்கோலும் அதனை உடையோனுக்கு இழப்பீட்டு நிதியாகச் சில வெண்பொற்காசுகளும் வழங்கப்பெறும். ஆனால், வரலாறு நிகழ்ந்தது சோழப் பேரரசில். எவ் வுயிர்க்கும் நீதி வழங்குவதை உயிரின் சீலமாகக் கொண் டொழுகிய சோழப்பேரரசர் வழிவந்த அரசன் துணுக் குற்றான்; விடம் தலைக்கேறிய நிலையினை எய்தினான். அரசன் உற்ற துன்பம் கன்றினை இழந்த பசுவின் துன்பத்தினை விஞ்சியது. என்னசெய்வது? என்ற வினா பிறந்தது.

அமைச்சர்கள், பசுவைக் கொன்றவர்க்கு அந்தணர் விதிமுறைநூல்விதிக்கும் கழுவாய்களை இளவரசன் செய்ய லாம் என்று எடுத்துக்கூறினர். இளவரசன் நோன்பிருந்து முறையாகத் தீர்த்தம் மூழ்கி தங்கத்தினாற் செய்த பசு ஒன்றினை அந்தணர்க்குத் தான்்மாக வழங்குதல் ஒழு கழுவாய்முறை. இந்து சமூகத்தில் கழுவாய் முறை தோன்றியவுடன் பாவங்களும் பெருகின. தங்கமே கண்ணிரின் சின்னம். ஒர் உயிர்பட்ட துன்பத்திற்குப் பிறிதோர் உயிர்க்குப் போகம் வழங்குவதன் மூலம் எப்படி குற்றம் நீங்கும்? கழுவாய் என்பது எந்த உயிர்க்குத் தீங்கு செய்யப் பெற்றதோ அந்த உயிர்க்கு ஆறுதல் தரத்தக்கதாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி ஒர் உயிர்க்குத் தீங்கு செய்த உயிர் தீங்கு செய்யும் இயல்பினுக்கு அடிப்படையாயிருந்த குற்றங்களினின்றும் விடுதலை பெற வேண்டும். தான்ம் செய்வதால் குற்றம் செய்யும் இயல்பு மாறாது. கண்ணிரைக் கண்ணிரால்தான்் மாற்ற முடியும். கண்ணிரை, கங்கையாலோ, காவிரியாலோ மாற்ற முடியாது. இந்த விழுமிய நீதியைச் சோழப் பேரரசன் ஏற்றுப் போற்றினான். பசு, தன் கன்றை இழந்து துன்புற்றதைப் போல் தான்் தன்னுடைய ஒரே மைந்தனை இழந்து துன்புறுதலே சரியான தண்டனை, விதிமுறை என்று அரசன் கருதினான்; அவ்வண்ணமே செய்ய முனைந்தான்! உலகுக்கு உணர்த்தினான். தனது ஒரு குலத்துக்கு ஒரு மைந்தனைத்