பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தேர்க்காலில் கிடத்தித் தேரினைச் செலுத்தத் தலைப்பட்டான்! ஆரூர் அண்ணல், அச்செய்கை பொறாது காட்சி தந்தருளி மன்னவன்றன் நீதியின் சிறப்பை மண்ணுலகுக்கு அறிவித்தனன்!

திருக்கூட்டம் என்பது அழகான சொல். திரு என்பது எழுத்தாலான சொல் மட்டுமன்று, திரு - கண்டோரால் விரும்பப்படும் தன்மை என்பார் பேராசிரியர், இறைவனுக்கே திரு' என்றொரு பேருண்டு. திருவருட் சிந்தனையுடையோர் பலர் கூடிய கூட்டம், திருக்கூட்டம், திருவருட் சிந்தனையுடைய்ோர் தனித்து வாழார். தனிமையிழந்த நிலையிலேயே அடியாராகின்றனர். "நான்", "தான்"என்ற சொற்கள் வழிப்பட்ட முனைப்பு, கழனியில் உள்ள களையினும் கொடியது, அடியார் வாழ்க்கைக்கு!

தாம் பெற்ற அருளனுபவத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும் மேலும். மேலும் வளர்த்துக் கொள்ளவும் பலர் சூழ வாழ்தலையே அடியார்கள் விரும்புவர். இன்று, அடியார்களைக் காண்பது அரிது. அதுவும் திருக் கூட்டமாகப் பார்ப்பது அரிது. அடியார்கள் புறத்தே திரு நீற்றொளிதாங்கி நடமாடுவர்; அகத்தே ஓசை நிலையிலும் புறத்தே ஒலி நிலையிலும் ஐந்தெழுத்தே எண்ணி நடமாடுவர். அடியார்கள் கைத்திருத் தொண்டு செய்யும் கடப்பாட்டில் சிறந்து விளங்குவர். பூசும் நீற்றினைப் போல உள்ளும் புனிதர்களாக விளங்குவர். நிலைதடுமாறினும், நிலை குலையா நெஞ்சத்தவர்; ஐம்பூதங்கள் நிலைதடுமாறினாலும் சங்கரன்தாள் மறவாதவர்; இவர்களே அடியார்கள். அவர்கள் மகிழ்ந்து அணிந்த அணி கண்டிகையே. உடுத்திய ஆடையும் கந்தையே. அவர்கள் ஈசன் பணியே பணியெனக் கொண்டவர்கள். உயிர் நலங்க்ாக்கும் ஈர அன்பினர்; குறை விலாதவர்; வீரத்தில் விழும்யர். அவர்களுக்குக் கேடும் இல்லை ஆக்கமும் இல்லை; கேடும் ஆக்கமும் கடந்த திருநிலை எய்தியவர்கள். ஒடு - செம்பொன் எல்லாம்