பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

217


அவர்களுக்கு ஒன்றுதான்். அவர்கள் மோட்சம், நரகம் பற்றிக் கூடக் கவலைப்படுவதில்லை. அவர்கள் 'கும்பிடு' குறியெதிர்ப்பு நோக்குடையதன்று. வணிக நோக்குடைய தன்று. கூடும் அன்பினில் கும்பிடுதலே அவர்கள் இயல்பு. இவர்களே அடியார்கள். -

சேக்கிழார் காட்டும் அடியார்களின் இலக்கணம் இது. ஆம்! தமிழகத்தில் இத்தகைய திருக்கூட்டம் கடலென நடமாடியதுண்டு. இன்றோ திருக்கூட்டத்திற்குப் பதில் நாட்டில் தெரு’க் கூட்டங்கள் வளர்ந்துள்ளன. சமயம் கருவுற்ற மனிதனை அழைத்துச் சென்று திருவிற்சேர்த்து மீண்டும் கருவுறா வண்ணம் காப்பதேயாம். இந்த அடியார்களின் வாழ்க்கை புறத்தால் அமைந்தன்று: அகத்தால் அமைந்தது. அதனால் புறம் இல்லை என்பது பொருளல்ல. புறத்தே நிகழும் நிகழ்வுகள் அகத்தே உணர்வுகளை வளர்க்கும் தகையன. பேணும் தகையன. திருநீறு சாதனத்திற் சிறந்த சாதனம்.இன்று திருநீறு, என்பது ஆன்றோர் உரைத்த நெறி முற்ைப்படி இல்லை. திருநீறு தூய்மையாக-வெண்மை நிறத்ததாக இருக்க வேண்டும். கருமை நிறம் கொண்டதாக இருத்தல் கூடாது. அது போலவே செந்நிறத்ததாகவும் இருத்தல் கூடாது. தூய வண்ணம் கலப்பற்ற வெண்மையான திருநீறே திருநீறு. திருவின் நிலை எய்தியவர்கள் ராகதுவேஷ’ங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களுக்கு விருப்பும் இல்லை; வெறுப்பும் இல்லை. காய்தலும் இல்லை, உவத்தலும் இல்லை. வேண்டுதலும் வேண்டாமையும் இல்லை. திருவருளைத் தவிர வேறு எந்த ஒன்றும் அவர்களை ஆட்கொள்ளாது. நிறங்களில் கூட வெண்மை ஒன்றே வெப்பத்தை ஈர்க்காதது. அதனாலேயே பழங்காலத்தில் கருப்பு நிறமுள்ள குடை வைத்திருந்தாலும் அதன்மீது வெள்ளைத்துணி தைத்திருப்பார்கள். ஆக, திருநீறு தூய்மையில் தூய்மையின் சின்னம், அதனால் திருநீறணிந்தவர்கள் உள்ளத்தில் நிறை தூய்மை